
ஒரு வழியாக வெளியானது லால் சலாம் ஓடிடி அறிவிப்பு?
படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய "ஹார்ட் டிஸ்க்" காணாமல் போனதே அதற்குக் காரணம் என்றும் சொன்னார்கள். அதன்பின் படம் ஓடிடியில் நான்கு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியாகவில்லை.
ஓடிடியில் வாங்குவதற்கு யாருமே முன் வரவில்லை என்று முதலில் செய்திகள் வெளியானது. அதன்பின் சில ஓடிடி நிறுவனங்களில் படம் வெளிவரும் என்றும் தகவல் வந்தது. ஆனாலும், அவை எதுவுமே நடக்கவில்லை. ஒரு வழியாக தற்போது படத்தின் ஓடிடி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் "இருட்டடிக்கப்பட்ட" ரஜினிகாந்த் உருவத்துடன் குட்டி வீடியோ மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஓடிடியில் வெளிவரும் போது காணாமல் போன ஹார்ட் டிஸ்க்கில் இருந்த காட்சிகளையும் சேர்த்து வெளியிட உள்ளதாக ஒரு தகவல் இருந்தது. அதன்படி இருக்குமா என்பது படம் வந்த பிறகே தெரியும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!