கடல் கன்னி ஆண்ட்ரியா

விக்ரம் பிரபு நடித்த "துப்பாக்கி முனை" படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவர் பிரபல கதாசிரியர் அன்னக்கிளி செல்வராஜின் மகன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது தந்தை எழுதிய "கடல்கன்னி" என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் கடல் கன்னியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். அவருடன் சுனைனா, முனீஷ்காந்த், பிரித்வி, ஜோசிகா மாயா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான பேண்டசி படமாக உருவாகி உள்ளது. "தி கிரேட் இண்டியன் கிச்சன்" படத்திற்கு இசை அமைத்த ஜெர்சி சில்வஸ்டர் வின்செண்ட் இசை அமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
திருச்செந்தூர் அருகே உள்ள மனப்பாடு கடற்கரையில் படமாகி உள்ளது. ஆண்ட்ரியா நடித்த அண்டர்வாட்டர் காட்சிகள் சென்னையில் படமாகி உள்ளது. ஒரு ஆதரவற்றோர் விடுதியில் வாழும் நீலன் என்கிற சிறுவன் ஆண்ட்ரியா எழுதின "ஜோகி"ங்கிற புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கிறான். அந்தக் கதையில வரும் கடல் கன்னி பேருதான் ஜோகி. "கடல்ல இருக்குற அத்தனை உயிர்களுக்குமே தாயாக இருக்குறது கடல் கன்னிதான் என்ற வரிகளைப் படித்த சிறுவன் கண்கலங்கியதோடு, கதையில் வருகிற கடல் கன்னியை, தன் அம்மாவாகவே நினைக்கிறான்.
இந்தச் சூழலில் அந்த விடுதிக்கு வருகிறார் எழுத்தாளர் ஆண்ட்ரியா. அவரிடம் தான் கடல் கன்னியை பார்க்க வேண்டும் என்கிறான். அவனது ஆசையை ஆண்ட்ரியா எப்படி நிறைவேற்றகிறார் என்பதுதான் கதை. பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்ற இந்தப் படம் விரைவில் தியேட்டரில் வெளியாகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.