ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி வெளியீடு

இவரின் நீண்டநாள் ஆசை சிம்பொனி இசை. இதையும் கடந்தாண்டு லண்டனில் ‛வேலியன்ட்" எனும் தலைப்பில் அரங்கேற்றினார். ஆசியாவில் இப்படியொரு சாதனையை செய்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா என்ற பெருமையை இவர் பெற்றார். தொடர்ந்து கடந்தாண்டு தமிழக அரசு சார்பில் இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடந்தபோது அந்த நிகழ்விலும் சிம்பொனியை நேரலையில் வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்நிலையில் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இசையமைத்த வேலியண்ட் சிம்பொனி இசை வருகிற ஜூன் 1ம் தேதி அனைத்து ஆடியோ தளங்களிலும் வெளியாகும் என அவரது இசை நிகழ்ச்சிகளை நடத்தும் மெர்குரி நிறுவனம் அறிவித்துள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.