கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...!

கிஸ்
டாடா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நடிகர் கவின் நடிப்பில் கடந்த செப்.19ம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் "கிஸ்". ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை(நவ.7ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நெட்வொர்க்
நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் தெலுங்கில் வெளிவரவுள்ள தொடர் "நெட்வொர்க்". செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னை குறித்துப் பேசும் இந்த வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை(நவ.7ம்தேதி) வெளியாகவுள்ளது.
கரம்
மலையாளத்தில் ஆக்ஷன், த்ரில்லர் கதைக்களத்தில் வெளியான திரைப்படம் ‛கரம்" (karam). இந்த திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (நவ.7ம் தேதி) வெளியாகவுள்ளது.
கமரோ 2
கன்னடத்தில் திகில் படமாக உருவான படம் ‛கமரோ 2" (kamaro 2). பேய்கள் சூழ்ந்த வீட்டில் தனது தங்கையைத் தேடிச் செல்லும் பெண், சந்திக்கும் பிரச்னை குறித்து விளக்கும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டி இருக்கும். இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.