பிளாஷ்பேக் : திருடனாக நடித்த ஜெமினி கணேசன்

கதை ஒரு தந்திரமான திருடனைப் பற்றியது (ஜெமினி கணேசன்). அமைச்சர் நீலகண்டம் (டி.எஸ். பாலையா) மாநிலத்தின் நிதியைக் கொள்ளையடிக்கிறார். அந்த அமைச்சரிடம் உள்ள மூன்று முக்கியமான வைரங்களைத் திருட திட்டமிடுகிறார் ஜெமினி கணேசன். அவரது காதலியான சாவித்திரி அவரை திருத்த முயற்சிக்கிறார். அவரும் திருந்தி விடுகிறார். ஆனால் மீண்டும் திருட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
தஞ்சை ராமையா தாஸ் திரைக்கதை, வசனம் எழுதிய இந்த படத்திற்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சுசர்லா தட்சிணாமூர்த்தி இசை அமைத்துள்ளார். அன்னையா ஒளிப்பதிவு செய்துள்ளார், வாஹினி ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. டிஎம் சவுந்தரராஜன் பாடிய முருக பக்தி பாடலான "முருகா என்றதும் உருகாத மனம்" என்ற பாடல் மிகவும் பிரபலமானது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.