
ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்றால் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சரவணன் தான். சினிமாவை உயிருக்கு உயிராக நேசிப்பவர். பத்து நிமிடம் பேசினால் அதில் அப்பச்சி... அப்பச்சி... என்று அவருடைய தந்தையை நினைவுபடுத்துவார். என் மீது நிறைய அன்பு வைத்தவர், எனது நல விரும்பி. எனது கஷ்ட காலங்களில் எல்லாம் என்னுடன் துணை நின்றவர். ஏவிஎம்மில் ஒன்பது திரைப்படங்கள் நடித்துள்ளேன், அந்த 9 படமும் ஹிட்.
எண்பதுகளில் முரட்டுக்காளை தமிழகத்தில் பிரம்மாண்டமாக வசூலை குவித்தது. 2000ம் ஆண்டுகளில் ‛சிவாஜி" மிகப்பெரிய படம் பிரமாண்டமான படம் வந்தது. 2020களில் பிரமாண்டமான படம் ஒன்று எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அது நடக்கவில்லை, அவருடைய மறைவு எனது மனதை பாதிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்"" என்றார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!