ஆரி அர்ஜுனனின் போர்த் புளோர்
பிப் 10, 2026

மனோ கிரியேஷன் சார்பில் ராஜா தயாரிக்கும் படம் "போர்த் புளோர்". எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கி உள்ளார். ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, மார்கன், மார்க் படங்களில் நடித்த தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். தருண்குமார் இசையமைத்துள்ளார், லக்ஷ்மன் ஒளிபதிவு செய்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, "இந்த திரைப்படம் கனவுகளுக்கும், நிஜவாழ்க்கைக்கும் இடையே இணைக்கும் பாலமாக எழுதப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட இந்தபடம் "யூ ஏ"சான்றிதழ் பெற்றுள்ளது. முகம் சுளிக்க வைக்காத, காட்சிகளுடன் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படமாக இருக்கும். பிரச்சனைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அதன் திரைக்கதை போக்கிலேயே சொல்லி இருக்கிறோம்" என்றார்.

Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.