நாயகியை சிபாரிசு செய்யும் நடிகர்
ஏப் 26, 2026

மீண்டும், வம்பு நடிகரின், "மார்க்கெட்" சூடுபிடிக்க துவங்கி இருப்பதை அடுத்து, கதாநாயகி விவகாரத்தை கையில் எடுத்து விட்டார். இயக்குனர்கள் கதை செல்லும்போதே, "இந்த ரோலில் இந்த நடிகை நடித்தால் தான் சிறப்பாக இருக்கும்..." என்று தன் அபிமான நடிகையரை நடிக்க வைக்குமாறு கட்டாயப்படுத்துகிறார். குறிப்பாக தற்போது, கோலிவுட்டில் வளர்ந்து வரும் சில இளவட்ட அம்மணிகளுக்கு நேரடியாகவே சிபாரிசு செய்கிறார். இதனால், மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரும் புது வரவு நடிகையர், வம்பு நடிகரின் இந்த தாராள மனசை புரிந்து கொண்டு, அவருக்கு, "சூப்பர் பார்ட்டி" கொடுத்து, பட வாய்ப்புகளை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.