ராஷ்மிகா, கிரித்தி சனோன் படம் லெஸ்பியன் கதை இல்லை : இயக்குனர் விளக்கம்
ஜூன் 02, 2026

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தற்போது அவர் ஹிந்தியில் உருவாகியுள்ள காக்டெய்ல் 2 என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக கிரித்தி சனோன் நடிக்க, கதாநாயகனாக சாகித் கபூர் நடித்துள்ளார். படத்தை ஹோமி அடஜானியா என்பவர் இயக்கியுள்ளார். படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதே சமயம் இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் கிரித்தி சனோன் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் பல சோசியல் மீடியாவில் வெளியாகின.
இதனை தொடர்ந்து இது ஒரு லெஸ்பியன் கதை என்பது போல நெட்டிசன்கள் தங்களது யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஹோமி அடஜானியா கூறுகையில், “நவீன கால காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளதே தவிர இந்த படத்தில் லெஸ்பியன் காதல் கதை என எதுவும் இல்லை. படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான சில கடற்கரை காட்சிகள் மற்றும் புகைப்படங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் இப்படி தங்களது யூகங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்” என்று இந்த பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.