
பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே?
மே 29, 2026
Advertisement
தமிழில் ஜனநாயகன் படத்தை அடுத்து காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அதையடுத்து ஹிந்தியில் ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படம் தனது பாலிவுட் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறாராம். தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும் ஹிந்தியில் பூஜா ஹெக்டே நடித்த தேவா மற்றும் கிசிகா பாய் கிசுகி ஜான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தன. இந்நிலையில் தான் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவாணுக்கு ஜோடியாக தான் நடித்துள்ள இந்த படத்தை எதிர்பார்க்கிறார் பூஜா ஹெக்டே. இந்த பொழுதுபோக்கு படம் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாலிவுட்டில் தனது மார்க்கெட்டை உயர்த்தும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
Tags
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!