மோசமான தோல்வியை சந்தித்த ஏக் தின்

நடிகர் அமீர்கானின் தயாரிப்பு நிறுவனமான அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுனில் பாண்டே இயக்கத்தில் அமீர்கான் மகன் ஜுனைத் கான் நாயகனாக நடிக்க, தமிழ் நடிகையான சாய் பல்லவி ஹிந்தியில் அறிமுகமாக மே 1ம் தேதி வெளிவந்த படம் "ஏக் தின்".
சுமார் 15 கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இந்தப் படம் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 5 கோடி மட்டுமே வசூலித்து மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
"ஒன் டே" என்ற தாய்லாந்து மொழிப் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவானது.
இப்படத்திற்காக அமீர்கான் நேரடியாக புரமோஷனில் இறங்கினாலும் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அவரது தயாரிப்பிலிருந்து இப்படி ஒரு குறைந்த பட்ஜெட் படம் வெளிவந்ததை ரசிகர்கள் விரும்பவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
தமிழ் நடிகையான சாய் பல்லவியின் ஹிந்தி அறிமுகம் தோல்வியில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் அதிகம் பேசப்பட்ட சாய் பல்லவி தனது ஹிந்தி அறிமுகப் படம் பற்றி மறக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பதுதான் உண்மை.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.