Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
மிதுனம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். எடுக்கும் வேலை இழுபறியாகும். வியாபாரிகளுக்கு அரசு வழியில் நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலர் வம்பு வழக்கு என்று காவல் நிலையம் செல்லக்கூடிய நிலை ஏற்படும்.

திருவாதிரை: பாக்ய சனியும் ராகுவும் உங்கள் வேலைகளை வெற்றியாக்குவர். பணப்புழக்கத்தை அதிகரிப்பர். வெளிநாட்டு முயற்சியை சாதகமாக்குவர். புதிய சொத்து வாகனம் என்ற கனவை நனவாக்குவர். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் செலவு அதிகரிக்கும். அலைச்சலும் வேலைபளுவும் கூடும். சில வேலைகளை முடிக்க முடியாமல் போகும். சூரியன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் அரசு பணியாளர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us