Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/பிறருக்கு உதவ வேண்டி அமெரிக்காவில் தமிழர்களின் 'ஓட்டம்'

பிறருக்கு உதவ வேண்டி அமெரிக்காவில் தமிழர்களின் 'ஓட்டம்'

பிறருக்கு உதவ வேண்டி அமெரிக்காவில் தமிழர்களின் 'ஓட்டம்'

பிறருக்கு உதவ வேண்டி அமெரிக்காவில் தமிழர்களின் 'ஓட்டம்'

அக் 29, 2024


Google News
Latest Tamil News
அமெரிக்காவிலுள்ள (TNF ) தமிழ்நாடு அறக்கட்டளை தமிழகத்தில் பெண்கள் நலம், கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம் அவர்களின் கல்வி, சமூக, பொருளாதாரம், மற்றும் கலாச்சார நிலைப்பாட்டுக்காக பாடுபட்டு வருகிறது.

இது சேவை எண்ணமுள்ள குழுவால் 1974 இல் உருவாக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அறக்கட்டளை.



தமிழ்நாட்டில் பேரிடர் கால உதவிகள், ஏழைகளின் படிப்பு , கல்வி நிறுவனங்களுக்குபலம் சேர்த்தல், சுகாதார மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப இதழ்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வருகிறது.



உதவுவதற்கு நிதி வேண்டும். அதை சும்மானாலும் அன்பளிப்பாக பெறாமல், தமிழர்களையும் இணைத்து இணைய வைத்து பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்துகிறார்கள். அதில் ஒன்று ஒன்று மாராத்தான் ஓட்டம்.



சந்திரசேகர் தலைமையில் இயங்கி வரும் ஆஸ்டின் பகுதி TNF கடந்த சனிக்கிழமை 10/19 அன்று ஆறாவது ஆண்டு 5K ரன் &வாக்கத்தான் நிகழ்வை பல அணிகளின் துணையுடன் வெற்றிகரமாக நடத்தியது



மெல்லிய குளிருடன் பெற்றோர்கள் பிள்ளைகள் என அந்த பந்தயத்தில் சுமார் 300 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர் .அதில் பிரிவு வாரியாக பரிசுகளும் வழங்கப் பட்டன.



நிகழ்ச்சிக்கு ஜர்னிமேன் கட்டுமானத் தலைவர் சாம்குமார் தலைமை வகித்தார். அவரது வாழ்க்கைப் பயணப் பேச்சு உத்வேகம் அளிப்பதாக இருந்தது.



அடுத்து, Bldg 18 பாஸ்கி ஒரு அற்புதமான ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையை வழங்கினார்.



பார்வையற்ற மாணவர்களின் நலனுக்காக நிகழ்வின் போது மொத்தம் $21,356திரட்டப் பட்டது. அதில் கலை, கைவினைப்பொருட்கள் மற்றும் சதுரங்கம் கற்பித்தல் மூலம் 9,909 அமெரிக்க டாலர் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே திரட்டப்பட்டது. இளைஞர்களும்$320 அமெரிக்க டாலர்நிதி திரட்டி அளித்தனர். ஜூஸ் பார்லர் புரவலர்களின் தாகத்தைத் தணித்ததுடன் நிதியும் ஈட்டித் தந்தது.



இந்த நிகழ்வில் 6 ஸ்பான்சர்கள், 50+ நன்கொடையாளர்கள், 30+ தன்னார்வலர்கள் மற்றும் 300 பங்கேற்பாளர்கள் என ஓட்டம் கலை காட்டிற்று.



5K நிகழ்வு மற்றும் தேவையான பிற தொழில்நுட்ப உதவிகளுக்கான வலைப்பக்க புதுப்பிப்புகளில் இணைந்து பணியாற்றியதற்காக சீதாவுக்கும்பார்வையற்ற குழந்தைகளுக்கான பேசும் பேனாக்களின் தேவைகளை ஒருங்கிணைத்து, பிரெய்லி திட்டத்திற்கான நிதி திரட்டலை ஊக்குவித்த டாக்டர் இளங்கோ, நிர்வாகக் குழுவில் உள்ள அலமு, உமா, ஷான், ஜே.பி,ஆலோசனைக் குழு அருண் மற்றும் வித்யா போன்ற அனைத்து சேவையாளர்களுக்கும் TNF ஆஸ்டின் குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் மனதார நன்றி தெரிவித்தார்.



- ஆஸ்டினிலிருந்து..R.திணேஷ்குமார்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us