/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/நியூஜெர்ஸியில் அறுபடைவீடு- இசை நாட்டிய நாடகம்நியூஜெர்ஸியில் அறுபடைவீடு- இசை நாட்டிய நாடகம்
நியூஜெர்ஸியில் அறுபடைவீடு- இசை நாட்டிய நாடகம்
நியூஜெர்ஸியில் அறுபடைவீடு- இசை நாட்டிய நாடகம்
நியூஜெர்ஸியில் அறுபடைவீடு- இசை நாட்டிய நாடகம்

முதலில், முருகனின் ஆறு படைவீடுகளாகிய பழநி, சுவாமிமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்,, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை போன்ற ஸ்தலங்களின், ஸ்தலபுராணத்தை பற்றி முன்னுரை வழங்கினர். அதை வழங்கிய மாணவியின் தமிழ் மிகத் தெளிவாகவும், மிகச் சரியான உச்சரிப்புடனும் அமைந்து இருந்ததது. இது, ஆசிரியரின் மேன்மையை விளக்குகிறது. இதன் பிறகு, டாக்டர் ஸ்வாமிநாதனின் முன்னுரைக்குப் பிறகு புவனாஐயர் அவருடைய குருவாகிய தர்மாத்மா டாக்டர் யஞ்யசுப்பிரமணியன் மாமாவிற்குத் தன் நன்றியைத் தெரிவித்து, நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.
முதலில் அறுபடை வீடு பற்றி அழகிய நடனம் இருந்தது. பிறகு சிவபார்வதி நடனம் மிகச் சிறப்பாக அரங்கமே அதிரும்படி இருந்தது. விண்ணை முட்டும் மேகக்கூட்டத்தில், பனிபுகை சூழ சிவன், பார்வதி, கணபதி மற்றும் முருகன் அமர்ந்து இருந்தது நிஜமாகவே கயிலாயத்தைப் பார்ப்பது போல் இருந்தது. புகை மூட்டத்திற்கு, பனியில்லாபனி (திடகார்பன்டைஆக்சைட்/ solid carbondi-oxide/dry ice) கொண்டு வந்து பனி புகை வருவது போல் செட் அமைப்பு செய்தது நன்றாக இருந்தது.
பிறகு ஆறு தாமரை மலரில் இருந்து ஆறு குழந்தைகள் எழுந்து வந்தது மிக சிறப்பாக இருந்தது. சிவன், பார்வதியாக ஆடி, நடித்த இரண்டு பேருமே மிகமிக சிறப்பாக ஆடி/ நடித்தார்கள்.
பாலமுருகனாக நடித்த குழந்தை எல்லோர் மனதையும் கவர்ந்து இழுத்தது. முருகன் மயில் மீது உலகை சுற்றும் காட்சி தத்ரூபமாக இருந்தது. காவடி ஆட்டமும் அதில் ஒரே நேரத்தில் சுமார் 40 குழ்நதைகள் வண்ண வண்ண நிறங்களில், அரங்க மேடை முழுவதும் மிக நேர்த்தியாக அருமையான பாடலுடன் ஆடியது, பார்ப்பவர் கண்களுக்கு ஒரு பிராட்வே காட்சி போலவே இருந்தது.
சுவாமிமலை கதைகள் சொன்ன விதம் ரொம்ப அருமை. திருச்செந்தூர் கதையில், வீரபாகுவுக்கு ஆசனம், மரம் இரண்டாக பிளக்கும் காட்சி, சேவல் எல்லாமே தொலைவிலிருந்து இயக்கப்பட்டு, நிஜ காட்சிகள் போல வடிவமைக்கப்பட்டு இருந்தது
நுண்ணறிவுத் திறனையும் காட்டுகின்றது. ஊஞ்சல் உற்சவம், வள்ளி கல்யாணம், போன்ற காட்சிகள் ப்ரமாதமாக இருந்தது.
முத்தாய்ப்பாக, பழமுதிர்சோலை கதையில், சுட்ட பழம் காட்சியில் ஔவையாராக நடித்த சிறுமி, நிஜமாகவே கம்பீரமாக பாடியது அரங்கை அதிசயிக்க வைத்தது. அருணகிரிநாதர் போல் பாடிய சிறுவனின் குரல்வளமும், சொல்வளமும் நிறைவாக இருந்தது. கடைசியாக ரமணி நக்கீரராக வந்து அறுபடைவீடு கொண்ட பாடலை முழுவதுமாக பாடியது பிரமிப்பாக இருந்தது.
எத்தனை மணிநேர பயிற்சி, எத்தனை முறை ஒத்திகை, எத்தனை கற்பனை திறன், திரை அமைப்பு, காட்சி அமைப்பு, நடன வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, தொழில்நுட்ப கலைஞர்கள், பாடல் கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்கள், ஒளி/ ஒளி அமைப்பாளர்கள், திரை அரங்கு மேற்பார்வையாளர்கள… அப்பப்பா, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!!!!! ,அவர்கள் எல்லோரையும் ஒன்றுபடுத்தி, கிட்டதட்ட மூன்றரை மாதமாக பயிற்சி கொடுத்து, சிறப்பாக நடத்த புவனாவால் மட்டுமே முடியும். அவரது கணவர் வெங்கட்டும் உற்ற துணையாக இருந்து, கடைசிவரை உதவி செய்தது மறக்க முடியாதது.
நியூஜெர்ஸி மக்கள், இந்தியா செல்லாமலே ஆறுபடை வீட்டையும் மிக அருமையாக ஸ்தல புராணத்தோடு, முத்தமிழ் சுவையோடு கண்டு களித்தனர்.
புவனாவைப் போல நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை, உலகின் எங்கு போனாலும், நமது ஹிந்து கலாச்சாரமும், தமிழ் மொழியும் அழியவே அழியாது என்பதற்கு இது ஒரு சாட்சியாகும்.
- தினமலர் வாசகி டாக்டர் அலமேலு சூரி