Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/மிடுக்கோடு மிரட்டும் அமெரிக்காவின் ஹாலோவின் !

மிடுக்கோடு மிரட்டும் அமெரிக்காவின் ஹாலோவின் !

மிடுக்கோடு மிரட்டும் அமெரிக்காவின் ஹாலோவின் !

மிடுக்கோடு மிரட்டும் அமெரிக்காவின் ஹாலோவின் !

நவ 05, 2024


Google News
Latest Tamil News
ஒவ்வொரு நாட்டிலும் கலாச்சார பண்டிகைகள் மற்றும் பங்களிப்புகள் மாறுபடுகின்றன. அக்டோபர் 31 அமெரிக்காவில் கோலாகலம் ! சின்ன பசங்களின் சந்தோஷத்திற்காக பெரியவர்களும் கூட இதில் மும்முரம். இதன் பொருட்டு மிரட்டும் மிடுக்கோடு வீட்டு வாசலில் ஒருமாதம் முன்பே அலங்கரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் அங்கு இருந்தது சிவப்பிந்தியர்கள்தான். ஐரோப்பியர்கள் வந்தபின் சிவப்பிந்தியர்களை மிரட்டி - விரட்ட வேண்டி துவங்கியது தான் ஹலோவீன் என்கிறார்கள். இவற்றில் பேய்-- பிசாசு.. எலும்புக்கூடு பிரதானம்! கற்பனை திறனோடு பரங்கிக்காயிலும் ஜிம் பூம் பா வேலைகள்! இந்த சமயம் பல்வேறு வேஷங்களில் வீட்டிற்கு வரும் பிள்ளைகளுக்கு “ஹாப்பி ஹாலோவின் !” சொல்லி சாக்லேட்கள் விநியோகிக்கிறார்கள்.



இதை பார்க்கும்போது நம் கிராமங்களில் மழைக்கு பிராத்தனை செய்யும் வண்ணம் பசங்கள் “ மழை சோறு !” என்று ஊர்வலம் வருவது ஞாபகத்திற்கு வருகிறது.



இங்கு சாக்லேட்கள் பெறுபவர் மட்டுமில்லை கொடுப்பவர் முகத்திலும் ஏக உற்சாகம்! எல்லாவற்றையும் நாமே வைத்துக் கொள்ளக் கூடாது— பிறருக்கும் கொடுக்கணும்: அதே போல சந்தோஷமாய் கொடுப்பதை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் உயரிய சிந்தனை !



வளரும் போதே வளமாய் விதை!



அமெரிக்கா- டெக்சாஸ் மாநில ஆஸ்டினில் எங்கள் மருமகன் வீட்டிலும் சாக்லேட் விநியோகம் நடந்தது. விநியோகித்ததோ ஒரு பங்கு. எங்கள் குட்டீஸ்களுடன் ஜாலியாய் அடியேனும் தெருவலம் சென்றபோது கிடைத்ததோ நான்கு பங்கு!



-என்.சி.மோகன்தாஸ்& தினேஷ்; படத்தொகுப்பு: வெ.தயாளன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us