பிப் 24, 2025

நான் (பிச்சினிக்காடு இளங்கோ) வளர்ந்தது கோவை வேளாண்மைப் பல்கலைக்கழத்தில். அங்கேதான் நான் கவிதையோடும் கால்பந்தோடும் தெரிந்தேன்; திரிந்தேன். அயலக தமிழ் அறிஞர்களுக்கான் விருதை கோவையில் நான் பயின்ற வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி கரங்களின்வழி பெற்றுக்கொண்டேன். துணையாய் இருந்தவர் எங்கள் முன்னோடி தாமரன்கோட்டை டாக்டர் முருகப்பன். துணை வந்தவர் அவரின் அன்புமகள் கிருத்திகா. அனைவரும் வேளாண்மைப்பட்டதாரிகள்.
ஒருமணி நேரம் மனம் கரைந்து உரையாடினோம். துணைவேந்தரின் தொலைநோக்குப் பார்வை, துடிப்பாற்றல் மிக்க செயல்திறன்; சமூக அக்கறை வியக்கவைத்தது. சாதனைமிகு துணைவேந்தரை இன்னும் சாதனையால் உலகம்போற்ற வாழ்த்தி, பல்கலைக்கழகப் பதிவாளரையும் சந்தித்து விடைபெற்றேன் பல்கலைக்கழகம்முன் நின்று என்னை நான் பதிவுசெய்தேன். தமிழ்தான் தமிழரின் முகவரி....பிச்சினிக்காடு இளங்கோ
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்