/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/வடஅமெரிக்க மாநிலம் ஜார்ஜியாவில் தமிழ்வாரம்வடஅமெரிக்க மாநிலம் ஜார்ஜியாவில் தமிழ்வாரம்
வடஅமெரிக்க மாநிலம் ஜார்ஜியாவில் தமிழ்வாரம்
வடஅமெரிக்க மாநிலம் ஜார்ஜியாவில் தமிழ்வாரம்
வடஅமெரிக்க மாநிலம் ஜார்ஜியாவில் தமிழ்வாரம்

பரவும் வகை செய்தல் வேண்டும்“
என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கூற்றுக்கிணங்க , அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாக, தமிழ்மொழிக்கான ஒரு வாரத்தை 2025 ஆம் ஆண்டின் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கக் குழுவினர், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பெற்றிருக்கிறோம்.
இதன்பொருட்டு 2025 பிப்ரவரி 11 ஆம்நாள், செவ்வாய்க்கிழமை அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் இயக்குனர்குழுத் தலைவர் கோகுல் ராசேந்திரன், மற்றும் இயக்குனர்குழு உறுப்பினர்கள் அன்புசெங்கோடன், கிருத்திகா பாரதி, ஜெகதீஸ்வரி சீதாராமன், தமிழ்ச்சங்கத் தலைவர் சண்முகம் சின்னத்தம்பி, துணைத் தலைவர் மருதயாழினி (எ ) பிரதீபா பிரேம், செயலாளர் மதுஅன்பு, பொருளாளர் திவ்யா வினோத், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் சிவா உள்ளிட்டோருடன் சங்கத்தின் செயற்பாட்டுக் குழுவினர் சங்கர் ராமசாமி, பீட்டர்ரோசாரி, கணேசன், சங்கீதா, நந்தினி, பபிதா மற்றும் சங்கத்தின் தூண்களான உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் ஜார்ஜியா மாநில ஆளுநர் பிரையன் கெம்ப் மற்றும் ஜார்ஜியாவின் முதல் பெண்மணி மார்ட்டி கெம்ப்பிடமிருந்து தமிழ் வாரத்திற்கான அறிக்கையைப் பெற்றுக் கொண்டோம்.
உலகம் முழுவதும் உலகத் தாய்மொழி நாள் (பிப்ரவரி 21) கொண்டாடப்படும் சிறப்பான நேரத்தில், “தமிழ்வாரம்” பிப்ரவரி 21 முதல் 27 வரை அட்லாண்டாவில் பறை சாற்றப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் பெருமை, பண்பாடு , மற்றும் அதன் செழிப்பைப் போற்றி மகிழ அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தினர் இந்தத் “தமிழ்வாரத்தை” தமிழோடு கொண்டாட அணியமாகி இருப்பது சிறப்பு வாய்ந்த ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
இந்த அறிவிப்பு, தலைமுறை தாண்டியும் தமிழ் வளர, புலம் பெயர்ந்து சென்றிருக்கும் தமிழ் மக்கள் நமது மொழியின் சிறப்பையும் அதன் பண்பாட்டையும் பாதுகாத்து ஒற்றுமையுடன் தமிழைத் தலைமுறை தாண்டியும் கொண்டு செல்ல வேண்டியதன் முகன்மையை வலியுறுத்துகிறது.
தமிழ் வாரத்தை ஆலம் விழுதுகள், குழலினிது யாழினிது, ஒருகதை சொல்லவா?, மரபுக்கலைகள், அமுதே சுவையே, இயலும் தமிழும், ஒளிவழித் தமிழ் என்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து இணைய வழியில் கொண்டாடத் தொடங்கியுள்ளனர் ஜார்ஜியா மாநிலத் தமிழ்மக்கள்.
ஒற்றுமை ஓங்கட்டும்! தமிழ் எங்கும் ஒலிக்கட்டும்!
- நமது செய்தியாளர் மருதயாழினி