/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் -தமிழ்ப் பள்ளி மாணவர் விழாஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் -தமிழ்ப் பள்ளி மாணவர் விழா
ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் -தமிழ்ப் பள்ளி மாணவர் விழா
ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் -தமிழ்ப் பள்ளி மாணவர் விழா
ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் -தமிழ்ப் பள்ளி மாணவர் விழா
பிப் 24, 2025

அமெரிக்கா புளோரிடா மாநிலம், ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் தமிழ்ப் பள்ளி மாணவர் விழாவில் மும்பை, இந்தியப் பேனாநண்பர் பேரவை தலைவர் மா. கருண் மாணவர்களுக்கு எழுச்சியுரையாற்றினார்.
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இளம் பருவத்திலேயே திருக்குறளைப் படிக்க வேண்டும். உலகின் மூத்த மொழியின் பிள்ளைகள் நாம் என்ற உணர்வோடு வளர வேண்டும் என அவரது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்வுக்கு ஜாக்ஸன்வில் தமிழ் மன்றத் தலைவர் பிரபு டில்லிநாதன் தலைமை தாங்க, நிகழ்வு இயக்குனர் வினோதா சிவகுமார், இந்தியப் பேனா நண்பர் பேரவையின் சிறப்பான வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைத்து, பேரவையின் சித்தாந்தங்களான அன்பு, நட்பு, மனிதநேயத் தத்துவங்களைப் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கூறி வரவேற்புரையாற்றினார்.
மா. கருணுக்கு பொன்னாடை, சந்தன மாலை அணிவித்து வரவேற்பு அளித்த விழாக்குழுவினர், நினைவுப் பரிசும் அளித்து கௌரவித்தனர். பள்ளி முதல்வர் கதிரவன் பெரியசாமி நன்றியுரையாற்றினார்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்