
தம்மாம் லூலூ மால் வழங்கிய தமிழர்களுக்கான பக்ரீத் கொண்டாட்ட நிகழ்வினை சவுதி அரேபியா தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் தம்மாம் தமிழிசை சங்கமும் இணைந்து நடத்தின. நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ் பாடகர் நூர் பாடலுடன் உடன் சம்பரன அஹாடமியும் கலந்து விழாவை சிறப்பித்தனர். ஆட்டம் பாட்டம் நடன இயக்குனராக காயத்ரி கலந்துகொண்டு அவரின் ரிதம் குழு சிறப்பாக நடனமாடி சிறப்பித்தனர்.
பாடகி ஹேமா மாலினி, YAJ உரிமையாளர் உமா ஷங்கர், அப்துல் சர்தார் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழர்களுக்கென பிரத்தியேக நிகழ்ச்சியினை தொடர்ந்து வழங்கும் லூலூ நிறுவனத்திற்கும் கலைஞர்களுக்கும் விழாவைச் சிறப்பிக்கும் வகையில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும் சவுதி அரேபியா தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் JTS பொறியாளர் காஜா மைதீன் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.
- நமது செய்தியாளர் பொறியாளர் காஜா மைதீன்