/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் கீழக்கரை இளைஞருக்கு விருதுதுபாயில் கீழக்கரை இளைஞருக்கு விருது
துபாயில் கீழக்கரை இளைஞருக்கு விருது
துபாயில் கீழக்கரை இளைஞருக்கு விருது
துபாயில் கீழக்கரை இளைஞருக்கு விருது

துபாய்: துபாயில் அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியின் 16வது கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷார்ஜா கன்சுலேட்டிவ் கவுன்சிலின் உறுப்பினர் முகம்மது அகமது அல் அலவி அல் தகூரி சமூகப் பணியில் சிறப்பான சேவை புரிந்த கீழக்கரை முஹம்மது ராசிக் என்ற இளைஞருக்கு விருது வழங்கி கௌரவித்தார். அப்போது அவர் முஹம்மது ராஷிக், இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வது, சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அவரது தன்னலமற்ற பணி போற்றுதலுக்குரியது என்றார்.
மேலும் கணபதி சுப்ரமணியன், இளம் உலக சாதனையாளர் மாஹிரா மகாபீர் உள்ளிட்டோருக்கு டீபா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இது குறித்து கீழக்கரை முஹம்மது ராசிக் கூறியதாவது :
துபாயில் கீழை கம்யூனிட்டி செண்டர் என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்துல் ரஹ்மான், ஜெய்னுலாபுதீன், எஸ்.கே.வி. ஷேக், பாசித் இல்யாஸ், ஹசன் பாய், ஜியாரத், ஹசன் பாசித் உள்ளிட்ட நண்பர்களுடன் தன்னார்வ பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். விளம்பரத்துக்காக மட்டுமல்லாமல் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இதனை செய்து வருகிறோம் என்றார்.
- நமது செய்தியாளர் காஹிலா