/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அபுதாபி இந்து கோவிலில் ரக்ஷா பந்தனையொட்டி சிறப்பு நிகழ்ச்சிஅபுதாபி இந்து கோவிலில் ரக்ஷா பந்தனையொட்டி சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி இந்து கோவிலில் ரக்ஷா பந்தனையொட்டி சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி இந்து கோவிலில் ரக்ஷா பந்தனையொட்டி சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி இந்து கோவிலில் ரக்ஷா பந்தனையொட்டி சிறப்பு நிகழ்ச்சி
ஆக 21, 2024

அபுதாபி : அபுதாபி பாப்ஸ் இந்து கோவிலில் முதல் முறையாக ரக்ஷா பந்தனையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், ராசல் கைமா ஆகிய அமீரகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் 2,500 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் தொழிலாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அவர்களை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். மேலும் கோவிலின் பல்வேறு பகுதிகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் அவர்கள் கலந்து கொண்டனர். பாப்ஸ் இந்து கோவிலின் தலைவர் புஜ்யா பிரம்மவிஹாரி சுவாமி கூறியதாவது : இந்த கோவில் உலக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது என்றார்.
ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு ராக்கி கயிறு அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா