/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஜோர்டானில் இந்திய சுதந்திர தின விழாஜோர்டானில் இந்திய சுதந்திர தின விழா
ஜோர்டானில் இந்திய சுதந்திர தின விழா
ஜோர்டானில் இந்திய சுதந்திர தின விழா
ஜோர்டானில் இந்திய சுதந்திர தின விழா
ஆக 20, 2024

துபாய் : ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்திய தூதர் மனீஷ் சவுகான் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின உரையின் முக்கிய பகுதியை வாசித்தார்.
இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த விழாவில் தூதரக அதிகாரிகள், இந்திய சமூகத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா