/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பாக்தாத்தில் சர்வதேச பெண்கள் தின கவிதை நிகழ்ச்சிபாக்தாத்தில் சர்வதேச பெண்கள் தின கவிதை நிகழ்ச்சி
பாக்தாத்தில் சர்வதேச பெண்கள் தின கவிதை நிகழ்ச்சி
பாக்தாத்தில் சர்வதேச பெண்கள் தின கவிதை நிகழ்ச்சி
பாக்தாத்தில் சர்வதேச பெண்கள் தின கவிதை நிகழ்ச்சி
மார் 28, 2024

பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி, இந்திய மற்றும் ஈராக் பெண் கவிஞர்கள் பங்கேற்று கவிதைகளை வாசித்தனர். அதில் பெண்களின் வலிமை, சமூகத்துக்கான பங்களிப்பு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் கவிதைகளை வெளிப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி பெண்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா