Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் அமீரக ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் பத்ரு நினைவு தினம் மற்றும் இஃப்தார்

துபாயில் அமீரக ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் பத்ரு நினைவு தினம் மற்றும் இஃப்தார்

துபாயில் அமீரக ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் பத்ரு நினைவு தினம் மற்றும் இஃப்தார்

துபாயில் அமீரக ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் பத்ரு நினைவு தினம் மற்றும் இஃப்தார்

மார் 28, 2024


Google News
Latest Tamil News
துபாய் : ஐக்கிய அரபு அமீரகம், துபையில் பத்ரு நினைவு தினம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி, 26-03-2024, செவ்வாய் கிழமை மாலை 4:30 மணிக்கு துபை தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் சீரும், சிறப்புமாக நடைபெற்றது.

அமீரக ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமளான் பிறை 17-லில் பத்ரு நினைவு தினம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்புற நடைபெறுவது வழக்கம். இஸ்லாமிய வரலாற்றில் பத்ரு யுத்தம் முக்கியமான ஒரு போராகும். இதை நினைவு கூறும் வகையில் நடந்த மேற்கண்ட நிகழ்வில் பத்ரு மௌலித் ஓதப்பட்டு, திருகுர்ஆன் ஷரீஃப் ஹத்தம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தார்கள். ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் குளோபல் தலைவர் முனைவர் AP.ஷஹாப்தீன் தலைமை வகித்து சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து சங்கைமிகும் ஸெய்யித் அலி மௌலானா சிறப்புரையாற்றினார்.

நிகழ்வின் தொடர்ச்சியாக நோன்பு திறப்பு எனும் இஃப்தார் நிகழ்வு நடைபெற்றது. இதில் கீழக்கரை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப், ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபீபுல்லா கான், அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் மற்றும் பல ஊர் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டார்கள். இரவு உணவோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.



- நமது செய்தியாளர் காஹிலா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us