/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/மஸ்கட் இந்திய தூதரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சிமஸ்கட் இந்திய தூதரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி
மஸ்கட் இந்திய தூதரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி
மஸ்கட் இந்திய தூதரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி
மஸ்கட் இந்திய தூதரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி
மார் 28, 2024

மஸ்கட், மார்ச் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தையொட்டி இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
அவர் தனது தலைமையுரையில் சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புனித திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில் நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இங்கு பங்கேற்றுள்ளார். இந்த ஐக்கியமும், ஒற்றுமையும் நம்மிடையே தொடர வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் இந்திய தூதரகத்தின் இந்த முயற்சிக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா