
துபாய் : துபாய் நகரின் அல் முஹைஸ்னா பகுதியில் அமைந்துள்ள அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் டாக்டர் அமீர் ஹுசைன் அல் அமெரி தொடங்கி வைத்தார். அவர் ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை தன்னார்வலர்களின் மூலம் 50 ஆயிரம் யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தமானது சர்வதேச பாதுகாப்பு வழிமுறைகளுடன் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா