செப் 11, 2024

குவைத் : குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் பெண்கள் பிரிவின் சார்பில் மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடந்தது.
முகாமில் திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி, காலிகிராபி எனப்படும் வடிவெழுத்து பயிற்சி, கலை மற்றும் சமையல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முகாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என கூறினர். பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்கள் சிறப்பானவையாக இருந்தது எனவும் தெரிவித்தனர். சுமார் 50 க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா