/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அசீர் தமிழ் சங்க ( ATS) இந்திய கலாச்சார விழா கொண்டாட்டம் அசீர் தமிழ் சங்க ( ATS) இந்திய கலாச்சார விழா கொண்டாட்டம்
அசீர் தமிழ் சங்க ( ATS) இந்திய கலாச்சார விழா கொண்டாட்டம்
அசீர் தமிழ் சங்க ( ATS) இந்திய கலாச்சார விழா கொண்டாட்டம்
அசீர் தமிழ் சங்க ( ATS) இந்திய கலாச்சார விழா கொண்டாட்டம்
நவ 11, 2024

அசீர் தமிழ் சங்கம் ( ATS) சார்பாக கடந்த இந்திய கலாச்சார விழா கொண்டாடப்பட்டது. ATS ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் விழாவை சிறப்பாக நடத்தினர். விழா தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் திருக் குர்ஆன் வசனத்துடன் துவங்கியது.
விழாவில் இந்திய கலாச்சாரம், பண்பாடு பற்றிய குறும்படம், மற்றும் பட்டிமன்றம், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதன் கீழ் அளிக்கப்படும் காப்பீட்டு திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஐம்பதிற்கும் அதிகமான தமிழ் உறவுகள் அதில் பதிவு செய்து பயனடைந்தனர்.
மேலும் விழாவில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது, விழாவில் பங்கேற்றவர்கள் இதனால் பயனடைந்தனர். விழா சிறப்பாக நடத்திய ஒருங்கிணைப்பாளர்களை வந்திருந்த அனைவரும் பாராட்டி விடைபெற்றனர்.
- நமது செய்தியாளர் M. Siraj