/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் சிறப்பு நிகழ்ச்சிமஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் சிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் சிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் சிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் சிறப்பு நிகழ்ச்சி
நவ 11, 2024

மஸ்கட் : மஸ்கட்டின் சீப் பகுதியில் உள்ள இந்திய பள்ளிக்கூடத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் எனப்படும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய தூதர் அமித் நாரங் பங்கேற்று பட்டேலின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு தாரக மந்திரங்களை விவரித்தார். மேலும் பட்டேல் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா