/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/சவூதி கமீஸ் முஷாய்யத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.சவூதி கமீஸ் முஷாய்யத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
சவூதி கமீஸ் முஷாய்யத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
சவூதி கமீஸ் முஷாய்யத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
சவூதி கமீஸ் முஷாய்யத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
நவ 29, 2024

அசீர் தமிழ்ச் சங்கம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் சார்பாக தொழிலாளர்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
NRTIA சவுதி அரேபியா பொறுப்பாளர்கள் பிரேம்நாத், முருகதாஸ், சந்தோஷ் பிரேம் ஆலோசனையின் படி, தென்மண்டல NRTIA நிர்வாகிகள் முனைவர். ஆனந்த் தேவ துரை , முனைவர் நூஹ் அப்துல்லா மற்றும் இஸ்மாயில் உசேன் மற்றும் அசீர் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் டேவிட் கமல்ஹாசன் ஆகியோர், கமீஸ் தாஹிஜ் மருத்துவக் குழுமத்துடன் இணைந்து கமீஸ் முஷாய்யத் தொழிற்ப்பேட்டையில் உள்ள தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தனர்.
இதில் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.தகவல்: Non Resident Tamil Indians Association (NRTIA)- Asir chapter வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் - அசீர்
நமது செய்தியாளர் M. Siraj