/உலக தமிழர்/ஆப்பிரிக்கா/செய்திகள்/ஜாம்பியாவில் கந்த சஷ்டி விழா கோலாகலம் ஜாம்பியாவில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
ஜாம்பியாவில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
ஜாம்பியாவில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
ஜாம்பியாவில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

மத்திய ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள ஜாம்பியா நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான இந்துக்களும் குறிப்பாக தமிழர்களும் வசித்து அந்த நாட்டில் பணியாற்றி வருகின்றனர்.
அந்த நாட்டின் தலைநகரான லூசாகா மற்றும் லிவிங்ஸ்டோன், கிட்வே, ண்டோலா நகரங்களில் இந்து ஹால்களும், கிருஷ்ணர் கோவில்களும், கபுவே என்னும் ஊரில் பவானி கோவிலும் உள்ளன.
இந்த நாட்டில் உலகின் நீளமான நீர் வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா பால்ஸ் மற்றும் சியாவோங்க என்னும் இடத்தில் உள்ள ஏரியானது மனிதனால் உருவாக்கப்பட்ட மிக பெரிய செயறகை ஏரி ஆகும், எம்பிகா என்னும் ஊரில் வெந்நீர் ஏரி ஒன்றும் உள்ளது. சுமார் இரண்டாயிரம் இந்துக்களும் ஐநூறு தமிழ் குடும்பங்களும் உள்ள லூசாகா நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் முருகனடிமை சேவா சங்கம் சார்பில் முருகன் கோவில் ஓன்று கட்டுவதுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் முருகனடிமை சேவா சங்கம், ஜாம்பியா சார்பில் வள்ளி தேவாசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி திருவிழா ஒன்பது நாட்கள் நடந்தது. இவ்வாண்டு விழா கடந்த 7 ம் தேதி தொடங்கி 10 ம் தேதி வரை நடந்தது.
தினமும் காலை மற்றும் மாலையில் அபிஷேகம் மற்றும் பூஜையில் திருப்புகழ், வேல் மாறல், கந்த சஷ்டி, கந்த குரு கவசம் பாராயணம் செய்யப்பட்டது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக சத்ரு சம்ஹார திரிசதி மற்றும் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது. 7ம் தேதி வள்ளி தேவாசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு மாலை 6.30 மணி அளவில் அபிஷேகம் தொடங்கி கந்த சஷ்டி பூஜைகள் நடைபெற்றன. 7ம் தேதி சூரஸம்ஹரமும், 10ம் தேதி சுப்ரமணிய சுவாமிக்கு லட்சர்ச்சனையும் நடைபெற்றது.
- நமது செய்தியாளர் நவ்ஃபல் ஃபக்ருதீன்