/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ ஓவியமா... இது சவுமியா வரைந்த காவியமா ஓவியமா... இது சவுமியா வரைந்த காவியமா
ஓவியமா... இது சவுமியா வரைந்த காவியமா
ஓவியமா... இது சவுமியா வரைந்த காவியமா
ஓவியமா... இது சவுமியா வரைந்த காவியமா
UPDATED : ஜூலை 14, 2024 12:07 PM
ADDED : ஜூலை 14, 2024 11:53 AM

'முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்'
இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தினமும் ஒரு குறள் என ஓவியத்தின் மூலம் அதன் பொருளை உணர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த சவுமியா. தற்போது சென்னை வி.பி. வைஷ்ணவ் கல்லுாரியில், விஷூவல் கம்யூனிகேஷன் துறை உதவி பேராசிரியராக பணிபுரிகிறார்.
அவரிடம் பேசுகையில்...
வேலுாரில் பள்ளி படிப்பை முடித்தேன். கல்லுாரியில் யூ.ஜி., ஆங்கில இலக்கியம் படித்தேன். படித்துக்கொண்டிருக்கும்போதே அனிமேஷனில் ஆர்வம் வந்ததால் அதில் டிப்ளமோ முடித்தேன்.
கவிதைகள், கதைகளை ஓவியங்களாக பிறர் வரைந்ததை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. நாமும் இப்படி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்தது. கல்லுாரி படிப்பு முடித்த பின் விளக்கப்படம், வரைபடங்கள், அனிமேஷன் படங்கள் உருவாக்குவதில் ஆர்வம் மேலிட்டது. ஓவியங்கள் வரைந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இப்படித்தான் உருவானது.



ஒரு குறளுக்கு ஏற்றவாறு ஓவியம் வரைய நான்கு மணி நேரம் ஆகும். சில சமயங்களில் 10 மணி நேரம் வரை கூட தொடரும். குறளுக்கு ஏற்றவாறு ஓவியம் வரைந்து அதன் கீழ் பொருள் விளக்கத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினேன். அதனை பார்த்து விட்டு முகம் தெரியாதவர்கள் பாராட்டும் போது கூடுதல் பொறுப்பு வந்தது. ஓவியத்தை இன்னும் அழகாக்கினேன்.
நாளடைவில் இது ஒரு சாதாரண முயற்சி என்பதை கடந்து மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி பார்த்தனர். 900 ஓவியங்கள் நான் கையால் வரைந்தது. மீதமுள்ளது நான் உருவாக்கிய டிஜிட்டல் ஓவியங்கள்.
அடுத்து சங்க இலக்கியங்களில் குறிப்பட்டுள்ள பெண் புலவர்கள் பற்றி இது போன்ற முயற்சியில் தொடர திட்டமிட்டுள்ளேன். கம்பராமாயணத்தில் இருந்து ஒரு பாடல் எடுத்து வரைந்துள்ளேன். நம் கலாச்சாரம், வரலாறு மீதான ஆர்வம் அதிகம் இருப்பதால் அதன் தொடர்பாக என் அடுத்த படைப்புகள் இருக்கும்.
ஆங்கில இலக்கியம் படித்தாலும் எனக்கு தமிழ் மேல் அளவுகடந்த பற்று உண்டு. 'இயல், இசை, நாடகம்' என்று சொல்வோம் அல்லவா. அதில் 'இயலை' எடுத்துக்கொண்டு 'இயல் ஆர்டின்ஸ்டா' என்ற பெயரில் குறளோவியங்களை பதிவிடுகிறேன்.இவ்வாறு கூறினார்.