/வாராவாரம்/விருந்தினர் பகுதி/'கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க...''கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க...'
'கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க...'
'கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க...'
'கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க...'
UPDATED : ஜூலை 07, 2024 08:17 AM
ADDED : ஜூலை 07, 2024 08:11 AM

'என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க...' என்று தனக்கே உரித்தான பேச்சால் பலரையும் ஈர்த்தவர் சிவகங்கை சீமையின் 'பரிதாபங்கள்' கோபி. இவருக்கென ரசிகர் பட்டாளம் உண்டு. இவரும் சுதாகரும் சேர்ந்து பதிவிடும் வீடியோக்கள் பலரது பேவரைட்.
யுடியூப் ரசிகர்களின் மனம் கவர்ந்த கோபி மனம் திறக்கிறார்...சிறுவயதில் இருந்தே சினிமா ஆர்வம் இருந்தது. 5ஆம் வகுப்பு ஆசிரியர் என் ஆர்வத்தை நாடகங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தார். அவர் கொடுத்த ஊக்கம் என்னை இந்த அளவுக்கு வளர்ச்சி அடைய செய்தது. திருச்சியில் கல்லுாரியில் படிக்கும் போது, எனக்கு சுதாகர் அறிமுகம். இருவரும் சேர்ந்து கல்லுாரி நிகழ்ச்சிகளில் எங்கள் திறமையை வெளிப்படுத்தினோம்.
கல்லுாரி முடித்து 'மெட்ராஸ் சென்ட்ரல்' யுடியூப் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தோம். அங்கு எங்களின் அடிப்படை வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர், இந்த யுடியூபின் நிறுவனரான தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி. அவர் எங்களை தன்னிச்சையாக, சுதந்திரமாக செயல்பட விட்டார். அங்கிருந்து நாங்கள் வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்தோம்.
சொந்தமாக 'பரிதாபங்கள்' என்ற யுடியூப் சேனல் ஆரம்பித்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு காலத்துல வடிவேல், கவுண்டமணி வீடியோ தான் மீம் போடுவாங்க. இன்றைக்கு எங்கள வச்சு மீம் போடுறது பெருமையா இருக்கு. 'என்னென்ன சொல்றான் பாருங்க, கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க...'. இந்த வீடியோவை சும்மா எடுத்துட்டு டெலிட் பண்ணிட்டோம். அப்புறம் குரூப்ல போடுவோம்ன்னு பதிவு செய்தோம். பார்த்தா அது டிரெண்டிங் ஆயிடுச்சு.
சென்னைக்கு வந்ததே சினிமாவுக்காகத்தான். நானும் சுதாகரும் சேர்ந்து நடிக்கிறதாக இருந்தாலும் தனியாக நடிக்கிறதாக இருந்தாலும் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். பத்து நிமிடம் சினிமாவில் வந்தாலும் இந்த கேரக்டர் நல்லா இருந்துச்சுப்பா என்று சொல்ற மாதிரி நடிக்க வேண்டும்.
சொந்த பணத்திலேயே ஒரு திரைப்படம் எடுக்கிறோம்; 95 சதவீதம் எடுத்து முடித்து விட்டோம். விரைவில் திரையில் காணலாம் என்றார்.