Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பொக்கிஷம்/ நீலகிரியில் பிரபலமடையும் சேற்று கால்பந்து.

நீலகிரியில் பிரபலமடையும் சேற்று கால்பந்து.

நீலகிரியில் பிரபலமடையும் சேற்று கால்பந்து.

நீலகிரியில் பிரபலமடையும் சேற்று கால்பந்து.

PUBLISHED ON : ஜூலை 26, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
Image 1299052நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில், கால்பந்து விளையாட்டில் அதிக அளவில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.Image 1299054இந்தப் பகுதியில் உள்ள பழங்குடியின இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், தமிழக - கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில், நடக்கும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று சாதித்து வருகின்றனர்.இவர்கள் டெல்லி வரை சென்று கால்பந்து விளையாட்டில் சாதித்தும் வருகின்றனர்.Image 1299055இந்நிலையில் கேரளாவில் மட்டுமே பிரபலமான சேற்று கால்பந்து போட்டி, பந்தலூர் அருகே மாநில எல்லையான தாளூர் பகுதியில் செயல்படும், ' நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்' கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.Image 1299056மழை பெய்யும் போது நெல் நாற்று நடவு செய்வதற்காக தயார்படுத்தப்பட்டுள்ள, வயல்வெளியில் சேற்றுடன் தண்ணீர் நிறைந்துள்ள பகுதியில், ஒரு அணிக்கு ஐந்து பேர் வீதம் இந்த விளையாட்டில் பங்கேற்கின்றனர்.Image 1299057பத்து நிமிடம் மட்டுமே விளையாடப்படும் இந்த போட்டியில், முறையான பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். சாதாரண தரைதளத்தில் பந்தை கடத்தி செல்வது போல், சேறு கலந்த தண்ணீரில், பந்தை கடத்திச் செல்வது எளிதான காரியம் இல்லை.எனினும் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்கள் பல்வேறு அணிகளாக பிரிந்து, சேற்று கால்பந்தில் தங்கள் திறமையை வெளிக்காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.Image 1299058மாணவர்களுடன் கல்லூரி மாணவியரும் 'ஹேண்ட் பால்' எனப்படும் கையில் பந்து கடத்திச் சென்று கோல் அடிக்கும் விளையாட்டில் பங்கேற்றனர்.சேறு கலந்த தண்ணீரில் மாணவிகள் கையில் பந்தை கடத்தி சென்று கோல் அடித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இது குறித்து கால்பந்து பயிற்சியாளர் சத்யன் மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் செரில்வர்கீஸ் ஆகியோர் கூறுகையில், தற்போது உள்ள இளைய தலைமுறையினர் சேற்றில் கால் வைப்பதையும், மழையில் நனைவதையும் தவிர்த்து வருகின்றனர். இதற்கு மாற்றாக மழையில் நனைந்து, சேற்றுநீரில் கால்பந்து விளையாடும் போது, உடல் திறன் மேம்படுவதுடன்., நோய் எதிர்ப்பு சக்தியும் அவர்களுக்கு அதிகரிக்கும்.

நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதேபோல் சேற்று கால்பந்து போட்டியை அனைத்து பகுதிகளிலும், அனைத்து தரப்பினரும் நடத்தினால் கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினர் இன்னும் திறன் பெறுவர் என்றனர்.

படம்,செய்தி:பந்தலுார் ராஜேந்திரன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us