Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பொக்கிஷம்/சென்னையைக் கலக்கிய பேஷன் ஷோ

சென்னையைக் கலக்கிய பேஷன் ஷோ

சென்னையைக் கலக்கிய பேஷன் ஷோ

சென்னையைக் கலக்கிய பேஷன் ஷோ

PUBLISHED ON : ஜூலை 22, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
Image 1297350

சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் போட்டோ வீடியோ கண்காட்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.

போட்டோ மற்றும் வீடியோ தொழிலில் எந்த அளவிற்கு முன்னேற்றம் வந்துள்ளது என்பதை அறிய இந்த தொழிலில் இருப்பவர்கள் இங்கு வருவர்.

அப்படி வருபவர்கள் தங்களது கேமராக்களில் படமெடுத்து பார்ப்பதற்காக அரங்கினுள் பேஷன் ஷோ என்ப்படும் ஆடை அலங்கார கண்காட்சி நடைபெறும்.Image 1297351இந்த வருடம் கேரளாவில் ஆடை அலங்கார வகுப்பு நடத்தும் கல்லுாரி மாணவியர் பங்கேற்ற கண்காட்சி நடைபெற்றது.Image 1297352இதுதான் தொழில் என முடிவெடுத்துவிட்ட மாணவியர் பொதுவெளியில் கொஞ்சம் கவர்ச்சியை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவந்தனர்.

பேஷன் ஷோவிற்குரிய லைட்டிங் இல்லை என்றாலும் கேமராவின் நவீன டெக்னாலாஜியில் படங்களை துல்லியமாக படமாக்கிக் கொண்டிருந்தனர் கலைஞர்கள்.

உண்மையில் இதுவும் ஒரு பாடம்தான், எந்தமாதிரியான 'லைட்' செட்டிங்குகளிலும் தனது படங்களில் அழகுணர்வைக் கொண்டுவருபவன்தானே மெய்யான கலைஞன்...

-எல்.முருகராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us