சென்னை இமேஜ் போட்டோ வீடியோக கண்காட்சி
சென்னை இமேஜ் போட்டோ வீடியோக கண்காட்சி
சென்னை இமேஜ் போட்டோ வீடியோக கண்காட்சி
PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM







பிளாஷ் போட்டோகிராபியில் எலின்குரோம் நிறுவனத்தின் தயாரிப்புகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒரு சாமனியனின் படத்தைக் கொடுத்தால் அதை டிஜிட்டல் ஆர்ட்டாக ராஜ அலங்காரத்துடன் உருவாக்கித் தருகின்றனர், இதற்காக புதுக்கோட்டையில் இருந்து வந்து முகாமிட்டுள்ள இளைஞர்களின் படைப்பு மற்றும் ரசனை பலரையும் வியக்கவைக்கிறது.
கண்காட்சியின் ஹைலைட் ரோபோ போட்டோ பூத்தாகும்.கல்யாண வீடுகளில் அங்குமிங்கும் பெண் போல வேடமிட்டு நகர்ந்து, நகர்ந்து விருந்தினர்களை படம் எடுத்து உடனடியாக கொடுக்கும் ரோபோ கேமரா பூத் தெரியும், அதன் ஹையர் வெர்ஷன் இது, இன்ஸ்டன்ட படமும் எடுத்துக் கொடுக்கும் கூடவே நல்ல ரெசிலுஷனில் படமும், வீடியோவும் கூட எடுத்துக் கொடுக்குமாம்.
பியூஜி நிறுவனத்தின் குட்டி கேமரா தாம்ரான் நிறுவனத்தின் லென்ஸ்கள் விதவிதமான கேமரா பேக்குகள் அமெரிக்க நிறுவனத்தின் ஸ்ட்ராப்புகள் குழந்தைகளை படம் எடுக்க தேவையான பொருட்கள் என்று கண்காட்சியில் பார்க்க, வாங்கக்கூடிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.
கண்காட்சி நடத்துபவர்கள் புகைப்பட ஆர்வலர்கள் அதிகம் படிக்கும் 'தினமலர் போன்ற பத்திரிகைளில் விளம்பரம் கொடுத்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அது அனைத்து தரப்புக்குமே பயனளிக்கும்.
-எல்.முருகராஜ்.