காசியில் உழவாரப்பணி நிகழ்த்த உள்ள சென்னை சிவனடியார்கள்
காசியில் உழவாரப்பணி நிகழ்த்த உள்ள சென்னை சிவனடியார்கள்
காசியில் உழவாரப்பணி நிகழ்த்த உள்ள சென்னை சிவனடியார்கள்
PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM



இந்து ஆலயங்களை சுத்தம் செய்யும் இறைப்பணியில் கணேசன் தலைமையிலான அடியார்கள் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள சிவ,வைணவ தலங்களில் ஏதாவது ஒரு தலத்தை தேர்ந்து எடுத்து ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமையன்று ஒன்று கூடி காலை முதல் மாலை வரை அந்தக் கோவிலையும் கோவில் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்வர்.
கோவிலை சுத்தம் செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அந்தப் பகுதியில் கோயில் நலன்,பாதுகாப்பு,துாய்மை போன்ற விஷயங்களை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலமும் செல்வர்,ஊர்வலத்தின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துணிப்பை உபயோகிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு துணிப்பை வழங்குவர்.

வது உழவாரப்பணியை உலகப்புகழ் பெற்ற காசி மாநகரில் நடத்திட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.



இதற்காக 276 அடியார்கள் கொண்ட குழு சென்னையில் இருந்து ரயில் மூலம் அலகபாத், அயோத்தி,மற்றும் காசி சென்று உழவாரப்பணியினை நிகழ்த்துகின்றனர்.
காசியில் கைலாய வாத்தியத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி அங்கும் மக்களிடம் துணிப்பை வழங்குகின்றனர்.ஊர்வலத்தின் போது இந்தி,ஆங்கிலம்,தமிழில் எழுதப்பட்ட விழிப்புணர்வு பாததைகள் ஏந்திச் செல்வர்.
காசியில் கங்கைக் கரையில் சிவ பூஜை,மாதேஸ்வர பூஜை,திருவாசக முற்றோதல்,நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை 1001 முறை உலக நன்மைக்காக எழுதுதல், பன்னிரு திருமுறை பராயணம் செய்தல்,மரக்கன்றுகள் நடுதல்,276 வது உழவாரப்பணி சிறப்பு மலர் வெளியிடுதல், அன்னதானம்,எளியவர்களுக்கு ஆடைதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தவுள்ளனர்.
வருகின்ற 30,31,01,02 ஆகிய தேதிகளில் உழவாரப்பணியை நடத்திவிட்டு சென்னை திரும்புகின்றனர்.
-எல்.முருகராஜ்