உலக நட்பு தினத்தில் நெகிழ்ச்சியும்..மகிழ்ச்சியும்...
உலக நட்பு தினத்தில் நெகிழ்ச்சியும்..மகிழ்ச்சியும்...
உலக நட்பு தினத்தில் நெகிழ்ச்சியும்..மகிழ்ச்சியும்...
PUBLISHED ON : ஜூலை 26, 2024 12:00 AM


கடல் பல தாண்டி,காடு பல கடந்து,நாடு பல ஓடி,கடும் உழைப்பினால்,சேர்த்த செல்வம்,ஒரு கனப் பொழுதில் ஒன்றும் இன்றி கரைந்து போகலாம்!
நோக்கம் பல கொண்டு,ஆக்கம் பல செய்து,அடைந்திட்ட புகழ் அனைத்தும்...ஒரு சிறு பொழுதில்,அடையாளமற்று அழிந்து போகலாம்!
-------ஒரே நாளில்மேலிருப்பவர்,கீழ் இறங்கலாம்!ஒரே இரவில்கீழ் இருப்பவர்,மேல் ஏறலாம்!
-------இந்த தலைகீழ் மாற்றத்தை,இந்த தரணி நமக்கு தானமாய் தந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனால் நாம் கற்றக் கல்வி,நாம் பெற்ற அறிவு!நாம் நீங்கும் வரை,நமை நீங்காது!
------கல்விஅயராதது!கல்விஅசராதது!கல்விஅழியாதது!
--கல்வி கற்பவர்களுக்கு அதுஎன்றும் சேதாரமற்ற,ஆதாரம்!
-------மனிதன் எனும் ஒர் விபரிதமான விலங்கை,பண்பட்ட சமுக விலங்காக மாற்றும் ஒரே காரணி கல்வி!
----இப்படிப்பட்ட அற்புதமான கல்வியைத் தந்த இந்த புனித வளனார் கல்வி வளாகத்தை வணங்கி மகிழ்வோம்..என்று லியோ மாலிஸ் வின்சென்ட் பேசிய போது அந்த அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லுாரியில் கடந்த 95-98 ஆம் ஆண்டு எம்சிஏ முதுகலை படித்த மாணவர்கள் இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு கடந்த வாரம் சந்தித்து மகிழ்ந்தனர்.

இந்த சந்திப்பிற்கு ஒரு வருடமாக சிந்தித்து முன்னாள் மாணவர்கள் செயலாற்றினர் காரணம் பலர் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் செட்டிலாகியிருந்தனர்.
மூன்று நாள் சந்திப்பை மிகக்குதுாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர், தாங்கள் படித்த வகுப்பறையில் அதே பெஞ்சில் உட்கார்ந்த போது பழைய நினைவுகள் வர கண்களில் நெகிழ்ச்சி கண்ணீர், இதில் இன்னும் விசேஷம் என்னவென்றால் இவர்களுக்கு அப்போது வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் ஒரு சிலர் இப்போதும் அங்கே பணியாற்றிவருகின்றனர் அந்த ஆசிரியர்களில் சிலர் இந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய மாணவர்கள் சிலரது பெயரை நினைவில் வைத்து அழைத்த போது உள்ளபடியே நெகிழ்ந்து போயினர்.
பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்வோடு விடைபெற்றுச் சென்றனர்.
தகவல்,படங்கள்:வில்சன்.


