Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/சரித்திரம் பழகு: யார் இவர்?

சரித்திரம் பழகு: யார் இவர்?

சரித்திரம் பழகு: யார் இவர்?

சரித்திரம் பழகு: யார் இவர்?

PUBLISHED ON : ஏப் 14, 2025


Google News
இவரது இயற்பெயர் முகமது சயத்.

ஔரங்கசீப்பின் படையில் இருந்த முக்கிய தளபதிகளில் ஒருவர். தென்னிந்தியாவை நிர்வாகிக்கும் பொறுப்பில் ஆற்காடு பகுதிக்கு அனுப்பப்பட்டார்.

ஆற்காடு நவாப் தாவூத்கானின் ஆட்சியில், தஞ்சை, திருச்சி பகுதிக்குப் பணம் வசூல் செய்யும் திவானாக இருந்தார்.

1700இல் வேலூர் கோட்டையை முற்றுகையிட்டு, மராட்டிய மன்னர் இராஜாராமின் படைத் தளபதி சங்கர் மல்ஹர் என்பவரைத் தோல்வியுறச் செய்தார்.

திமிரி, பள்ளிகொண்டா, ஆரணி ஆகிய பகுதிகளில் இருந்த பாளையக்காரர்களைப் போரில் வென்றதால், 'கிபாயத்கான்' என்னும் பட்டப் பெயரை ஔரங்கசீப் வழங்கினார்.

தாவூத் கானுக்குப் பிறகு இவர் ஆற்காட்டின் நவாப் ஆனார். இவரைப் பற்றி அறிவதற்கு 'சையத் நாமா', 'திவானி அமீன்', 'குல்சன்--இ-சாதத்' உள்ளிட்ட நூல்கள் உதவுகின்றன.

செஞ்சி மன்னர் ராஜா தேசிங்கு, வரி கொடுக்க மறுத்ததால், அவரைப் போரில் சூழ்ச்சி செய்து கொன்றார். ராஜா தேசிங்கின் மனைவி கணவனின் சிதையில் விழுந்து உயிர் நீத்ததால், அவரது பெயரில் 'ராணிப்பேட்டை' என்ற நகரை உருவாக்கினார்.

இந்த ஆற்காடு நவாப் யார்?

விடைகள்: சாதத்துல்லாகான். இந்தப் பெயரும் ஔரங்கசீப் கொடுத்த பட்டப் பெயர்தான்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us