Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/உயிரியல் உலகம்: மணமற்ற வியர்வை!

உயிரியல் உலகம்: மணமற்ற வியர்வை!

உயிரியல் உலகம்: மணமற்ற வியர்வை!

உயிரியல் உலகம்: மணமற்ற வியர்வை!

PUBLISHED ON : ஏப் 07, 2025


Google News
Latest Tamil News
* மனித உடலின் இயற்கையான செயல்பாடுகளில் ஒன்று வியர்வை வெளியேற்றம். இது நம்மைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது முதல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது வரை பல நன்மைகளைச் செய்கிறது.

* வியர்வை உண்மையில் மணமற்றது. வியர்வைக் குழாய்களில் இருந்து வெளியேறும் வியர்வை பெரும்பாலும் நீர், உப்பு கலந்தது. ஆனால், தோலில் உள்ள பாக்டீரியாக்கள் இதை உடைத்து, ஒரு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதையே நாம் வியர்வை நாற்றம் என்கிறோம். இது ஒவ்வொரு மனிதனின் உடல் வேதியியலைப் பொறுத்து சிறிது வேறுபடுகிறது. இதனால் தான் ஒருவருக்கு நாற்றம் அதிகமாகவும், மற்றவருக்குக் குறைவாகவும் இருக்கிறது.

* நம் உடலில் இரண்டு வகையான வியர்வைக் குழாய்கள் உள்ளன. அவை எக்ரைன் (Eccrine), அப்போக்ரைன் (Apocrine) ஆகும். எக்ரைன் குழாய்கள் உடல் முழுவதும் பரவி, வெப்பநிலையைச் சீராக்க உதவுகின்றன. அப்போக்ரைன் குழாய்கள் அக்குள், மார்பகப் பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இவை புரதம், கொழுப்பு நிறைந்த வியர்வையைச் சுரக்கின்றன. இதுவே பாக்டீரியாவால் மாற்றப்பட்டு நாற்றத்தை உருவாக்குகிறது.

* சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 0.5 முதல் 2 லிட்டர் வரை வியர்வையைச் சுரக்கிறான். வெப்பமான சூழல், உடற்பயிற்சியின் போது இது அதிகரிக்கலாம்.

* மன அழுத்தம் அல்லது பயம் ஏற்படும் போது சுரக்கும் வியர்வை எக்ரைன் குழாய்களில் இருந்து வருகிறது. இதனால் தான் பதற்றமான சூழலில் குளிர் வியர்வை (Cold sweat) என்று சொல்லப்படும் நிலை ஏற்படுகிறது.

* வியர்வை உடலில் உள்ள நச்சுகளை (Toxins) வெளியேற்றுவதாக நம்புகிறோம் ஆனால் அது உண்மையில்லை. கல்லீரல், சிறுநீரகங்களே இதைச் செய்கின்றன. வியர்வையின் முக்கியமான பணி உடல் வெப்பநிலையைச் சீராக்குவதே ஆகும்.

* மனிதர்களைப் போலவே குதிரைகளுக்கும் வியர்க்கின்றன. நாய், பூனை முதலிய விலங்குகள் வியர்வைக் குழாய்கள் மூலமாக அல்லாமல், நாக்கு மூலமே வியர்வையை வெளியேற்றுகின்றன.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us