Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

PUBLISHED ON : ஏப் 21, 2025


Google News
Latest Tamil News
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. தமிழகத்தின், 'நம்பர் 1' மாநகராட்சியாக எதை, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை தேர்வு செய்துள்ளது?

அ. நாமக்கல்

ஆ. காரைக்குடி

இ. தஞ்சாவூர்

ஈ. புதுக்கோட்டை

2. தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராகப் புதிதாகப் பதவி ஏற்றுள்ளவர்?

அ. அண்ணாமலை

ஆ. நயினார் நாகேந்திரன்

இ. தமிழிசை செளந்தர்ராஜன்

ஈ. எச்.ராஜா

3. உலகிலேயே மிக உயரமான, 'ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன்' எனும் பாலம், எந்த நாட்டில் உள்ள, குய்ஸுவு - யுனான் மாகாணங்களை இணைக்கும் வகையில், பெய்பென் ஆற்றின் மீது கட்டப்பட்டு உள்ளது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. தென்கொரியா

ஈ. தாய்லாந்து

4. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ரோபோ' அறுவை சிகிச்சை வசதி, வடகிழக்கு மாநிலங்களில் முதன்முறையாக, எங்கு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது?

அ. நாகாலந்து

ஆ. மேகாலயா

இ. மணிப்பூர்

ஈ. அசாம்

5. அரசு நிர்வாகத்தில், அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், 'ஏஐ' தொழில்நுட்பம் குறித்து மூன்று மாத, 'ஆன்லைன்' பயிற்சியை, எந்த மாநில அரசு கட்டாயமாக்கி உள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிசா

இ. கேரளம்

ஈ. குஜராத்

6. தொடர்ந்து நான்காவது ஆண்டாக, 2024 - 2025 நிதியாண்டிலும், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக, எந்த நாடு உள்ளது?

அ. அமெரிக்கா

ஆ. சீனா

இ. ரஷ்யா

ஈ. பிரிட்டன்

7. அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில், இந்தியாவின் ஜோதி - ரிஷாப் யாதவ் ஜோடி வென்ற பதக்கம்?

அ. தங்கம்

ஆ. வெள்ளி

இ. வெண்கலம்

ஈ. பிளாட்டினம்

8. மகாராஷ்டிராவின் மும்பையைத் தலைமையிடமாக வைத்து இயங்கும் மத்திய ரயில்வே மண்டலம் சார்பில், எந்த ரயிலில் ஏ.டி.எம். சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது?

அ. ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

ஆ. பஞ்சவடி எக்ஸ்பிரஸ்

இ. ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ்

ஈ. டெக்கன் குயின்

விடைகள்: 1. இ, 2. ஆ, 3. அ, 4. ஈ, 5. ஆ, 6. அ, 7. அ, 8. ஆ




      Our Apps Available On




      Dinamalar

      Follow us