Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/அமிழ்தமிழ்து: ல, ழ, ள புதிர்

அமிழ்தமிழ்து: ல, ழ, ள புதிர்

அமிழ்தமிழ்து: ல, ழ, ள புதிர்

அமிழ்தமிழ்து: ல, ழ, ள புதிர்

PUBLISHED ON : ஏப் 21, 2025


Google News
மூவகையாக ல, ழ, ள ஒலிப்புகள் உள்ளன. இவற்றில் சிறப்பு ழகரம் தனித்த ஒலியுடையது. எளிமையாக ஒலித்தால் லகர ஒலி தோன்றும். சற்றே நாவினை மேலண்ணம் தொட்டு ஒலித்தால், ளகர ஒலி பிறக்கும். இவ்வெழுத்துகள் சொற்களில் பயன்படுகையில் என்ன பொருள் தரும் என்று அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் பொருள் மாறுபடும். இவ்வெழுத்துகளைச் சொற்களில் மாற்றிப் பயன்படுத்திவிட்டால் பிழையாகிவிடும்.

இன்றைய புதிரில், மூவகை ல, ழ, ள வரிசை எழுத்துகள் பயன்படும், சொற்களில் ஒன்று கொடுக்கப்படும். இன்னொன்றின் பொருளைக் கொண்டு உரிய சொல்லைக் கூறவேண்டும்.

அ) ஒருவரை வரவேண்டுவது -அழை,

கடலில் தோன்றுவது ______________________

ஆ) மாந்தர் - ஆள்,

விழுதுவிட்டு வளர்வது ______________________

இ) மரத்தில் விளைவது - புளி,

காட்டில் வாழ்வது ______________________

ஈ) குழந்தை குடிப்பது - பால்,

வீணாகப் போவது ______________________

உ) வெட்டுவது - வாள்,

குரங்கிற்கு உண்டு ______________________

ஊ) நடை உறுப்பு - கால்,

விதையென்பது ______________________

எ) இனி வரும் நாள் -நாளை.

ஏழுக்கு மூன்றோடு கூட்ட வேண்டியது ______________________

ஏ) தைப்பிறந்தால் பிறப்பது - வழி

காற்று மண்டலமாவது ______________________

ஐ) இனிப்பது வெல்லம்.

நீர்ப்பெருக்கு ______________________

ஒ) வினவு என்பது கேள்

நிறம் என்னும் பொருள் தருவது ______________________

-மகுடேசுவரன்

விடைகள்:

அ) அலை

ஆ) ஆல்

இ) புலி

ஈ) பாழ்

உ) வால்

ஊ) காழ்

எ) நாலை

ஏ) வளி

ஐ) வெள்ளம்

ஒ) கேழ்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us