எடுப்பான முகத்திற்கு சீரான பற்கள் அவசியம்; கருத்தரங்கில் தகவல்
எடுப்பான முகத்திற்கு சீரான பற்கள் அவசியம்; கருத்தரங்கில் தகவல்
எடுப்பான முகத்திற்கு சீரான பற்கள் அவசியம்; கருத்தரங்கில் தகவல்
ADDED : ஆக 23, 2010 12:46 AM
மதுரை: எடுப்பான முகத்திற்கு சீரான பற்கள் அவசியம் என மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. அங்கு நடந்த இலவச பல்மருத்துவ முகாமில் டாக்டர் ஜிப்ரில் பேசியதாவது: சில குழந்தைகள் பிறக்கும்போதே பற்களுடன் பிறக்கின்றன.
இவை தாய்ப்பால் கொடுக்க தடையாய் இருக்கும். அவற்றை அகற்றுவதால் பாதிப்பு வராது. குழந்தைகளுக்கு இரவில் பால் கொடுத்தபின் சிறிது தண்ணீர் கொடுத்தால் பற்கள் பாதிக்கப்படாது. ஈறுகள் காயமடையும்போதும், பிற பொருட்கள் உறுத்தும்போதும், நுண்ணுயிர் கிருமிகள் தாக்கும்போதும் அவை தடித்து புண்ணாகி ரத்தம் கசியும். துர்நாற்றம் ஏற்படும். பற்களை பற்சொத்தை நோய் அதிகம் தாக்குகிறது. உண்ணும் உணவின் சர்க்கரை பொருளும், ஐஸ்கிரீம், மிட்டாய் போன்றவையும் பற்குழிகளில் தங்கி, உமிழ்நீரை தாக்குகின்றன. இந்த அமிலம் பற்சிப்பியை சிறுக சிறுக சிதைக்கிறது. இதுவே பற்சொத்தையாக வடிவெடுக்கிறது. சீரான பற்களால் அழகான சிரிப்பு, எடுப்பான முகஅமைப்பு, உணவை கடித்து அரைத்து உண்பது, தெளிவான சொற்கள் போன்ற பயன்கள் கிடைக்கின்றன. எனவே ஆரோக்கியமான பற்கள் அவசியம். நவீன பல்மருத்துவம் மூலம் கடுமையாக சிதைந்த, வலிவந்த பற்களையும் பிடுங்காமல், வேர் சிகிச்சை செய்து காப்பாற்ற முடியும். பிடுங்கித்தான் ஆகவேண்டிய நிலையில், அந்த இடத்தில் செயற்கை பல் பொருத்தலாம் என்றார்.