Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/செந்திலாண்டவர் பாலிடெக்னிக்கில்பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

செந்திலாண்டவர் பாலிடெக்னிக்கில்பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

செந்திலாண்டவர் பாலிடெக்னிக்கில்பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

செந்திலாண்டவர் பாலிடெக்னிக்கில்பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

ADDED : ஆக 23, 2010 04:44 AM


Google News

தென்காசி:தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டமும், சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்க நாட்டு நலப்பணி திட்டமும் இணைந்து கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு மண்டல அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமை நடத்தியது.

கல்லூரி வளாகத்தில் நடந்த இம்முகாமிற்கு கல்லூரி சேர்மன் புதிய பாஸ்கர் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.



கல்லூரி துணை முதல்வர் முருகேசன் வரவேற்றார்.குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பேராசிரியை கயற்கண்ணி வெள்ளப்பெருக்கு, கடல் அலைகள், சுனாமி பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார். செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ரத்னபெத் முருகன் சாலை விபத்துகள், வெட்டு காயங்கள், தீ விபத்து குறித்து விளக்கினார்.கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் பூமி அதிர்வு, பூகம்பம், சுனாமி, நிலச்சரிவு பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார். தென்காசி தீயணைப்பு துறை அலுவலர் இம்மானுவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.முகாமில் சங்கர் பாலிடெக்னிக், ஐ.ஆர்.டி.பாலிடெக்னிக், ஸ்காட் பாலிடெக்னிக், எம்.எஸ்.பி.வி.பாலிடெக்னிக், வி.என்.என்.வி. பாலிடெக்னிக், அரசன் கணேசன் பாலிடெக்னிக், அய்ய நாடார் ஜானகியம்மாள் பாலிடெக்னிக், கலசலிங்கம் பாலிடெக்னிக், மஞ்சம்மாள் பாலிடெக்னிக், பாரதியார் நினைவு பெண்கள் பாலிடெக்னிக், அரசினர் பாலிடெக்னிக், லட்சுமியம்மாள் பாலிடெக்னிக், ராமசாமி ராஜா பாலிடெக்னிக், கேப் பாலிடெக்னிக், சாமுவேல் பாலிடெக்னிக், சாண்டி பாலிடெக்னிக், பி.என்.என்.பாலிடெக்னிக், எப்.எஸ்.பாலிடெக்னிக், உதயா பாலிடெக்னிக், எஸ்.ஏ.ராஜா பாலிடெக்னிக், சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக், சவுடாம்பிகா பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லூரிகளின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள், திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், விடுதி காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.நாட்டு நலப்பணி திட்ட உதவியாளர் முருகையா நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் சிவராமன், மல்லிகா செய்திருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us