மதுரையில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சி
மதுரையில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சி
மதுரையில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சி

மதுரை: மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் அருட்காட்சியில் நுழைவு வாயில் முதல் மூலவர் வரை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று பூஜை செய்து துவக்கி வைத்தார்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், துணைத் தலைவர் ஜெயகுமார் முன்னிலை வகித்தனர்.
கோயில் வளாகத்தை கண்முன் கொண்டு வரும் வகையில் கற்சிற்பங்கள், கோயிலின் தலவரலாற்றுடன் கூடிய பேனர் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நுழைவு வாயில் முதல் கருவறை வரை ஒவ்வொரு அமைப்பும் தத்ரூபமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் வைத்து வழிபாடு நடத்திய வேல் அந்தந்த சன்னதியில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டு உள்ளன.
![]() |
வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி, குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கிஷோர்குமார், பக்தவச்சலம், பா.ஜ., மாநில விவசாய அணி துணை தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., பங்கேற்பா
''மதுரையில் நடக்கும் முருகபக்தர்கள் மாநாட்டில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டால் பங்கேற்போம்'' என மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
நேற்று அவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த சில சம்பவங்களுக்கு முதல்வராக இருந்த பழனிசாமி முறையாக நடவடிக்கை எடுத்தார். பொள்ளாச்சி வழக்கில் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டு 'யார் அந்த சார்' என்பதை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளோம். தி.மு.க., அரசு எந்த ஒரு சம்பவத்திற்கும் உத்தரவிடுவது கிடையாது. தி.மு.க.,தான் 'யார் அந்த சார்' என்பதை சொல்ல மறுக்கின்றனர்.
மதுரையில் ஹிந்து முன்னணி நடத்தும் முருகபக்தர்கள் மாநாட்டில் பழனிசாமி உத்தரவிட்டால் நாங்கள் பங்கேற்போம். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. தேர்தல் நெருங்கும் போது தான் யார் யார் கூட்டணியில் சேருவார்கள் எனச் சொல்ல முடியும். இவ்வாறு கூறினார்.