/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா? புட்டு புட்டு வைக்கிறது 'சிபில் ஸ்கோர்'வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா? புட்டு புட்டு வைக்கிறது 'சிபில் ஸ்கோர்'
வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா? புட்டு புட்டு வைக்கிறது 'சிபில் ஸ்கோர்'
வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா? புட்டு புட்டு வைக்கிறது 'சிபில் ஸ்கோர்'
வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா? புட்டு புட்டு வைக்கிறது 'சிபில் ஸ்கோர்'
ADDED : பிப் 24, 2024 01:08 AM

முந்தைய காலங்களில் மக்கள் வீடு, வாகனம் வாங்குவது, தொழில் மேம்பாடு போன்றவற்றுக்காக கடன் கேட்டு, வங்கிகளை நேரடியாக அணுகுவது வழக்கம்.
இவ்வாறு அணுகுவோரின் சொத்து நிலை, கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு அவரிடம் உள்ள வருவாய் குறித்த விபரங்களை, வங்கிகள் ஆராயும். இதைத்தான் 'சிபில் ஸ்கோர்' என்றழைக்கின்றனர்.
இதில் ஈடாக காட்ட, அதிக மதிப்புடன் சொத்துக்கள் இருந்தால், அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபருக்கு கடன் வழங்குவது குறித்து, வங்கிகள் முடிவு செய்யும்.
கடன் தவணையை முறையாக செலுத்தும் வகையில், உரிய அளவுக்கு வருவாய் இருந்தால் அவருக்கு கடன் வழங்க வங்கிகள் முன்வரும்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக யார் கடன் கேட்டு வங்கிகளை அணுகினாலும், அவர்களின் பான் எண்ணை பயன்படுத்தி, வங்கிகள் கடன் தகுதி புள்ளிகள் நிலை குறித்து ஆராய்கிறது.
கடன் தகவல் நிறுவனமான, 'கிரடிட் இன்பர்மேஷன் பீரோ ஆப் இந்தியா' என்ற, சிபில் புள்ளிகள் குறித்து வங்கிகள் ஆராய்கின்றன.
இன்றைய சூழலில், ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் வங்கிகளிடம் கடன் வாங்கும் நிலையில் உள்ளனர். இதனால், அனைத்து வங்கிகளும், விண்ணப்பதாரரின் கடன் தகுதி புள்ளிகளை ஆராய்வதை, வழக்கமாக கொண்டுள்ளன.
இதில் ஒவ்வொருவரின் தகுதியும், பல்வேறு நிலைகளாக வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒருவரின் செல்வ நிலை மட்டுமல்லாது, அவரது திருப்பி செலுத்தும் பழக்கம் எப்படிப்பட்டது என்பதன் அடிப்படையில் தான், இந்த புள்ளிகள் வரையறுக்கப்படுகின்றன.
இதில் வீட்டுக்கடனுக்காக, விண்ணப்பிப்போரின் தகுதியை முடிவு செய்ய, அனைத்து வங்கிகளும் இந்த புள்ளிகளை பயன்படுத்த துவங்கி உள்ளன.
இதனால் சிக்கல் இன்றி கடன்களை முறையாக செலுத்தி வரும் நபர்களுக்கு, வருவாய் குறைவாக இருந்தாலும் வீட்டுக்கடன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம், புள்ளிகள் குறைந்தவர்களுக்கு வீட்டுக்கடன் மறுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிரெடிட் கார்டு, தொலைபேசி கட்டணம் ஆகியவற்றை முறையாக செலுத்தாவிட்டாலும் கடன் தகுதி புள்ளிகள் குறைகின்றன.
கிரெடிட் கார்டு, தொலைபேசி கட்டணம் கட்டுவதில் வாடிக்கையாளரால் மட்டுமே பிரச்னை ஏற்படும் என்று மதிப்பிடுவது தவறு. சம்பந்தப்பட்ட சேவை வழங்கும் நிறுவனத்தின் குளறுபடியால் கூட, கட்டணம் வசூலாவதில் பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம்.
இது போன்ற சிறிய காரணங்களால், ஏற்படும் கடன் தகுதி புள்ளிகள் சரிவு, வீட்டுக்கடன் போன்ற விஷயங்களில் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.
எனவே, வீட்டுக்கடனுக்கு செல்வோர், தங்கள் கடன் தகுதி உள்ளிட்டவைகளை சீராக பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர், வங்கி அதிகாரிகள்.