/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ மழைக்காலத்தில் மொட்டை மாடி பராமரிப்பு! கவனிக்கத் தவறினால் கட்டடத்தினுள் நீர் இறங்கி விடும் மழைக்காலத்தில் மொட்டை மாடி பராமரிப்பு! கவனிக்கத் தவறினால் கட்டடத்தினுள் நீர் இறங்கி விடும்
மழைக்காலத்தில் மொட்டை மாடி பராமரிப்பு! கவனிக்கத் தவறினால் கட்டடத்தினுள் நீர் இறங்கி விடும்
மழைக்காலத்தில் மொட்டை மாடி பராமரிப்பு! கவனிக்கத் தவறினால் கட்டடத்தினுள் நீர் இறங்கி விடும்
மழைக்காலத்தில் மொட்டை மாடி பராமரிப்பு! கவனிக்கத் தவறினால் கட்டடத்தினுள் நீர் இறங்கி விடும்
ADDED : ஜூன் 22, 2024 07:04 AM

கட்டடத்தின் முழு பாதுகாப்பு கவசத்தை, எப்படி பாதுகாக்க வேண்டும் என்று வழி சொல்கிறார், கொசினா முன்னாள் தலைவர் பாலமுருகன்.
அவர் கூறியதாவது: தற்போது மழை காலத்தை காணப்போகிறது கட்டடம். இந்த காலகட்டத்தில், முதலாவதாக கவனிக்கப்பட வேண்டிய பகுதி மொட்டை மாடி. இது, கட்டடத்தின் முழு பாதுகாப்பு கவசமாகிறது.
பழைய காலங்களில் மொட்டை மாடி, மாலை நேர ஓய்வுக்கும், காலை நேர சூரிய நமஸ்காரம் செய்யும் பகுதியாகவும் இருந்தது. இந்த நிலை தற்போது மாறி விட்டது. கைபேசி, தொலைபேசி, தொலைக்காட்சி என ஆக்கிரமித்து, மொட்டை மாடிக்கு செல்வதை தடைபடுத்தி விட்டது.
மொட்டை மாடியில் மழைநீர் வடிகால் அமைப்பு முறையானது, ஒவ்வொரு 600 முதல் 750 சதுரடிக்கு ஒன்று ஏற்படுத்த வேண்டும். காரணம், மழையின் வேகம் அதிகம் இருக்கும் சமயத்தில் அந்த பரப்பளவில் வடிகால் வைத்தால், நீர் உடனே வெளியேறி விடும். இல்லை எனில் நீர் தேங்கித் தான் வெளியேறும்.
இது, நாள்பட்ட விரிசலை ஏற்படும். இந்த விரிசல் வழியாக, மேற்கூரை கான்கிரீட் பாதிக்கும். மொட்டை மாடி தளம் முறையே பல்வேறு வடிவங்களில், பல்வேறு பொருட்கள் வைத்து கையாளப்படுகிறது. சிமென்ட் தளமாக இருந்தால், மாடி பரப்பு கருப்பு நிறமாக விடக்கூடாது. ஓடு ஆக இருந்தால், கருப்பாக மாறிய பிறகு, ஒரு சில ஓடுகள் மாறும். இவ்வாறு, மாறி விடக்கூடாது.
டைல்ஸ் ஆக இருந்தால், இணைப்புகளை கவனித்து இணைப்பான் கொண்டு நிரப்ப வேண்டும். இவ்வாறு செய்தால், மழை கால பாதிப்பில் இருந்து மொட்டை மாடி தளத்தை பாதுகாக்கலாம்.
மழைநீர் வெளியேறும் ஒரு சில இடங்களில், மரம், செடி கூட வளர்ந்திருப்பதை காண முடியும். இவ்வாறு வரும் வரை விட்டு விடக்கூடாது. இது கட்டடத்தை பாதிக்கும். சன்ேஷடு மேற்புறம் உள்ள சுவரில், அதாவது, லிண்டல் மேற்புறம் சிறு விரிசல் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த விரிசல் வழியாக, மழைநீர் வெளிப்புற சுவரில் இருந்து, உட்புறம் வர வழி உண்டு. இந்த பகுதியில் கவனம் வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.