/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/சுற்றுச்சூழல் காக்கும் மரபு முறை கட்டுமானங்கள்!சுற்றுச்சூழல் காக்கும் மரபு முறை கட்டுமானங்கள்!
சுற்றுச்சூழல் காக்கும் மரபு முறை கட்டுமானங்கள்!
சுற்றுச்சூழல் காக்கும் மரபு முறை கட்டுமானங்கள்!
சுற்றுச்சூழல் காக்கும் மரபு முறை கட்டுமானங்கள்!
ADDED : ஜூன் 29, 2024 07:33 AM

சுற்றுச்சூழலை பாதிக்காமல், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு கட்டப்படும் கட்டுமானங்கள் தான், மரபு முறை கட்டுமானங்கள். இது குறித்து, கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க (காட்சியா) தலைவர் விஜயகுமார் கூறியதாவது:
தொழில் சார்ந்த புரட்சி ஏற்படுவதற்கு முன், நமது வீடுகளை மரபு முறையில் தான் அமைத்தோம். குறிப்பாக, கான்கிரீட் கட்டடங்களுடன் ஒப்பிடும்போது, சுண்ணாம்பை பிரதானமாக கொண்டு கட்டப்படும் வீடுகளில், வெளிப்புற வெப்பத்தை விட வீட்டின் உள்ளே, 6 முதல் 8 டிகிரி வரை குறைந்த வெப்பநிலை நிலவுவதாக, ஆய்வுகளின் அடிப்படையில் அறியப்பட்டுள்ளது.
அதை உணர்ந்திருந்த நமது முன்னோர், முற்காலங்களில் சுண்ணாம்பு மற்றும் மண் கலவைகளை கொண்டு வீடுகளை அமைத்தார்கள். நம் மரபு சார்ந்த கட்டுமான நுட்பங்கள், தொன்மை வாய்ந்தவை. அவை அந்தந்தப் பகுதிகளுக்கு உரித்தான கட்டுமான பொருட்களைக் கொண்டு நேர்த்தியாகவும், தரமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, தமிழகத்தில் மிக முக்கியமான கொங்கு மண்டலம், டெல்டா பகுதிகள், தென் தமிழக பகுதிகள் மற்றும் வட தமிழக பகுதிகள் அந்தந்த பகுதிகளுக்கே உரித்தான கட்டுமான பொருட்களைக் கொண்டு, மிக அழகாக கட்டப்பட்டிருக்கும்.
இவை அனைத்துமே, பொதுவான அடிப்படை வடிவமைப்புகள் செய்யப்பட்டிருக்கும். இந்த கட்டுமானங்கள், தேவைகளை கருத்தில் கொண்டு தற்காலிகம் மற்றும் நிரந்தர கட்டுமானங்கள் என இரண்டு வகைகளில் கட்டப்பட்டிருக்கும். இதனால், ஆற்றல் செலவுக்கு இயந்திரங்கள் தேவை இல்லை, இயந்திரங்களுக்கு எரிபொருள் தேவை இல்லை, கம்பி இல்லை, மணல் வள கொள்ளை இல்லை, மலைகள் விழுங்கும் வேலைக்கும் இடமில்லை,
இயற்கை வள சுரண்டல் இல்லை, தேவையை தவிர மற்ற தேவைகள் இல்லை. இவை அனைத்துமே இல்லாமல் எல்லாமே செய்த சமூகம் தான், இன்று இடையே ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப தடுமாறுகிறது. காலம் கடந்து நிற்கும் வீடுகளை, உருவாக்கும் பாரம்பரிய கட்டடக் கலை மிகப்பெரிய பொக்கிஷம். இவ்வாறு, அவர் கூறினார்.