Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கடையாணி/லெக்சஸ் எல்.எக்ஸ்., 500டி சொகுசு 'லேண்ட் க்ரூசர்'

லெக்சஸ் எல்.எக்ஸ்., 500டி சொகுசு 'லேண்ட் க்ரூசர்'

லெக்சஸ் எல்.எக்ஸ்., 500டி சொகுசு 'லேண்ட் க்ரூசர்'

லெக்சஸ் எல்.எக்ஸ்., 500டி சொகுசு 'லேண்ட் க்ரூசர்'

ADDED : மார் 12, 2025 09:00 AM


Google News
Latest Tamil News
'லெக்சஸ்' நிறுவனம், அதன் 'எல்.எக்ஸ்., 500டி' எஸ்.யூ.வி.,யின் 2025 மாடல் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார் 'அர்பன்' மற்றும் 'ஓவர்ட்ரைல்' என இரு வகையில் வந்துள்ளது. இது, 5 - சீட்டர் வகையில் மட்டுமே வருகிறது.

இது, 'டெயோட்டா லேண்ட் க்ரூசர்' எஸ்.யூ.வி.,யின் சொகுசு மாடல் கார் ஆகும். இதனால், இந்த காரின் விலை 60 லட்சம் ரூபாய் அதிகம். மற்றபடி, கட்டமைப்பு, இன்ஜின், கியர் பாக்ஸ், சஸ்பென்ஷன், இதர ஆப்ரோட் அமைப்புகள் உள்ளிட்டவற்றில் மாற்றம் இல்லை. இந்த காரில், சஸ்பென்ஷன்கள் ட்யூன் செய்யப்பட்டு, உயர கட்டுப்பாடு அமைப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த கார், 'லேடர் பிரேம்' சேசிஸில் கட்டமைக்கப்பட்டுள்ளதால், உயரமான கம்பீர தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

வெளிப்புறத்தில் லெக்சஸ் அடையாளம் கொண்ட விசேஷ 'ஸ்பின்டில்' கிரில், 'எல்' வடிவ டி.ஆர்.எல்., லைட்டுகள், 22 அங்குல அலாய் சக்கரங்கள், பின்புற இணைப்பு டெயில் லைட்டுகள், குரோம் மற்றும் வெள்ளி நிற அலங்காரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உட்புறத்தில், டூயல் டோன் கேபின், டேஷ் போர்டில் ஹேட்ஸ்சப் டிஸ்ப்ளே உட்பட நான்கு டிஸ்ப்ளேக்கள், இரண்டாம் வரிசையில் இரண்டு டிஸ்ப்ளேக்கள், 4 - ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், முன்புற மசாஜ் சீட்டுகள், 25 ஸ்பீக்கர் 3டி சவுண்ட் சிஸ்டம், 5 ரைட் மோடுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பை பொறுத்த வரை, அடாஸ் பாதுகாப்பு, 10 பாதுகாப்பு பைகள், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்டவை உள்ளன.

விபரக்குறிப்பு


இன்ஜின் - 3.3 லிட்டர், வி6, டிவின் டர்போ, டீசல்
பவர் - 304 ஹெச்.பி.,
டார்க் - 700 எம்.எம்.,



விலை: ரூ.3 கோடி - ரூ.3.12 கோடி



டீலர்:Lexus Chennai - 75500 19000







      Our Apps Available On




      Dinamalar

      Follow us