அல்ட்ராஒய்லட் டெசராக்ட் இ.வி., அடாஸ் பாதுகாப்பு உள்ள முதல் ஸ்கூட்டர்
அல்ட்ராஒய்லட் டெசராக்ட் இ.வி., அடாஸ் பாதுகாப்பு உள்ள முதல் ஸ்கூட்டர்
அல்ட்ராஒய்லட் டெசராக்ட் இ.வி., அடாஸ் பாதுகாப்பு உள்ள முதல் ஸ்கூட்டர்
ADDED : மார் 12, 2025 08:58 AM

'அல்ட்ராஒய்லட்' நிறுவனம், 'டெசராக்ட்' என்ற அதன் முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன்பதிவு ஆரம்பமாகி உள்ள நிலையில், வினியோகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் துவங்குகிறது.
இது, அடாஸ் பாதுகாப்பு வசதி கொண்ட இந்தியாவின் முதல் ஸ்கூட்டராகும். செயற்கை நுண்ணறிவின் வாயிலாக இதில் உள்ள ரேடார் மற்றும் டேஷ் கேம் அமைப்புகள் இயங்குகின்றன. ஓட்டுனர் மோதாமல் இருக்க, ஸ்கூட்டரின் கைப்பிடியில் ஏற்படும் அதிர்வுகளின் வாயிலாக, பாதுகாப்பு எச்சரிக்கையை உணர முடியும்.
இந்த ஸ்கூட்டரில், 3.5, 5 மற்றும் 6 கி.வாட்.ஹார்., என மூன்று வகை பேட்டரிகள் உள்ளன. பேட்டரி ஆற்றலை பொறுத்து, 162 கி.மீ., முதல் 261 கி.மீ., ரேஞ்ச் வரை தருகிறது. பாஸ்ட் சார்ஜிங் வாயிலாக 80 சதவீதம் சார்ஜ் செய்ய, ஒரு மணி நேரம் ஆகிறது.
நேர்த்தியான மற்றும் ஸ்போர்ட்டி டிசைன் கொண்ட இந்த ஸ்கூட்டரில், 14 அங்குல அலாய் சக்கரங்கள், 34 லிட்டர் பூட் ஸ்பேஸ், 7 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, டிராக் ஷன் கன்ட்ரோல், ரீஜென் பிரேக்கிங், எல்.இ.டி., லைட்டுகள், ஸ்மார்ட் போன் இணைப்பு, சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 1.45 லட்சம் ரூபாய்.